பெய்ஜிங்: அமெரிக்க டென்னிஸ் பொதுவிருதுப் போட்டியின் பெண்கள் பிரிவில் வெற்றிபெற்று சாதனை படைத்த 18 வயது இளையர் எம்மா ரடுகானுவை சீன நாட்டவர் கொண்டாடி வருகின்றனர்.
எம்மாவின் தந்தை ரோமானிய நாட்டவர். தாயார் சீன நாட்டவர். எம்மா இரண்டு வயதாக இருக்கும்போதே அவர்களுடைய குடும்பம் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தது.
சீனாவில் உள்ள சொந்தங்களுடன் எம்மா தொடர்பில் இருப்பதை வெய்போ சமூக ஊடகத்தில் பொதுமக்கள் பாராட்டினர்.மேலும் எம்மா மாண்டரினில் பேசிய காணொளி அதிகம் பகிரப்பட்டது.
எம்மா ரடுகானு, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் கனடாவைச் சேர்ந்த லேலா ஃபெர்னாண்டசை 6-4. 6-3 எனும் ஆட்டக்கணக்குகளில் வீழ்த்தினார்.
இந்நிலையில் அமெரிக்கப் பொதுவிருதுப் போட்டியின் ஆண்கள் பிரிவில் ரஷ்யாவைச் சேர்ந்த டானில் மெட்வடேவ், செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை நேற்றுமுன்தினம் தோற்கடித்தார். ஆட்டவிவரம்: 6-4, 6-4, 6-4.

