துணை சபாநாயகர் வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

கோலா­லம்­பூர்: மலே­சிய நாடா­ளு­மன்­ற துணை சபாநாய­க­ராக யார் தேர்வு செய்யப்படுவார்் என்று அறிந்­து­கொள்ள மலே­சி­யர்­கள் மத்­தி­யில் பெரும் எதிர்­பார்ப்பு இருந்து வரு­கிறது.

துணை சபாநாய­கரைத் தேர்ந்­தெ­டுக்க நாடா­ளு­மன்ற உறுப்­

பி­னர்­கள் வாக்­க­ளிக்­க­வேண்­டும்.

ஆனால் இந்த வாக்­கெ­டுப்பு அடுத்த நாடா­ளு­மன்ற அமர்வு வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த மாதம் நாடா­ளு­மன்­றம் கூடும்­போது மலே­சி­யா­வின் அடுத்த ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டம் தாக்­கல் செய்­யப்­படும்.

அப்­போது துணை சபாநாய­

க­ருக்­கான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. துணை சபாநாய­கர்­க­ளின் எண்­ணிக்­கையை இரண்­டி­லி­ருந்து மூன்றாக உயர்த்த அர­ச­மைப்­புச் சட்­டத்­தைத் திருத்­தவே துணைச் சபா நாய­க­ருக்­கான வாக்­கெ­டுப்பு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக மலே­சிய சட்ட அமைச்­சர் வான் ஜுனாய்டி துவான்கு ஜாஃபார் கூறி­னார்.

“துணை சபாநாய­க­ர் பதவிக்கு யாரை முன்மொழியலாம் என அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் குறிப்­

பி­டப்­ப­ட­வில்லை. எனவே, புதிய விதி­மு­றையை நாங்­கள் உரு­வாக்­கக்­கூ­டும். எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வரை துணை சபாநாய­கர்­களில் ஒரு­வ­ராக நிய­மிக்க அர­மைப்­புச் சட்­டத்­தில் திருத்­தம் செய்­யப்­ப­டக்­கூ­டும்,” என்­றார் அவர். மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் தற்­போது இரண்டு துணை சபாநாய­கர்­கள் மட்­டுமே இருக்­க­லாம்.

கடந்த மாதம் துணை சபா நாய­கர் பத­வி­யி­லி­ருந்து திரு­வாட்டி அச­லினா ஒத்­மான் சஹாட்

வில­கி­னார். அவ­ருக்­குப் பதி­லாக அம்­னோ­வின் தலை­மைச் செய­லா­ள­ரான திரு அக­மது மஸ்­லானை அப்­ப­த­விக்கு மலே­சிய அர­சாங்­கம் முன்­மொ­ழிந்­தது. மூன்­றா­வது துணை சபாநாய­கர்

பத­வியை எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வகிக்­க­லாம் என்ற யோச­னையை திரு அக­மது முன்­வைத்­தார்.

கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக்­கிய குற்­றம், முன்­னாள் மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக்­கி­ட­மி­ருந்து 2 மில்­லி­யன் ரிங்­கிட் பெற்­றுக்­கொண்­டது தொடர்­பாக மலே­சிய ஊழல் தடுப்பு ஆணை­யத்­தி­டம் பொய் வாக்­கு­மூ­லம் கொடுத்­தது ஆகிய குற்­றச்­சாட்­டு­க­ளைத் திரு அக­மது எதிர்­நோக்குகி­றார். இந்­நி­லை­யில், துணை சபாநாய­கர் பத­விக்கு திரு அக­மதை முன்­மொ­ழிந்­தது தொடர்­பாக மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­பி­டம் பத்து காஜா தொகுதி நாடா­ளு­மன்ற உறப்­பி­ன­ரான வி. சிவ­கு­மார் கேள்வி எழுப்பியுள்­ளார்.

இதற்­கி­டையே, நம்­பிக்கை, விநி­யோகம் தொடர்பான ஒப்­பந்­தம் மலே­சி­யா­வில் நேற்று முன்­தி­னம் முதல்­மு­றை­யா­கக் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. அதில் மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­பும் எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­கி­மும் கையெ­ழுத்­திட்­ட­னர். ஆட்சி செய்­யும் முறையை மேம்­ப­டுத்­து­வது, கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைள், ஜன­நா­யக அணு­கு­மு­றை­கள் ஆகி­ய­வற்­றில் 18 மாற்­றங்­கள் நடை­மு­றைப்­

ப­டுத்­தப்­படும் என்று திரு இஸ்­மா­யில் தலை­மை­யி­லான மலே­சிய அர­சாங்­கம் வாக்­குறுதி தந்­துள்­ளது. அதற்­குப் பதி­லாக, திரு இஸ்­மா­யி­லுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு­ வ­ரப்­பட்­டாலோ அல்­லது அர­சாங்­கம் ஏதே­னும் மசோதா தாக்­கல் செய்­தாலோ எதிர்க்­கட்­சிக் கூட்­ட­ணி­யான பக்­கத்­தான் ஹரப்­பான் அவற்றுக்கு எதி­ராக வாக்­க­ளிக்­கக்­கூ­டாது அல்­லது வாக்­கெ­டுப்­பில் கலந்­து­கொள்­ளக்­கூ­டாது.

கையெ­ழுத்­தி­டப்­பட்­டுள்ள இரு­த­ரப்பு ஒப்­பந்­தத்­தைப் பாது­காக்க ஆளுங்­கட்­சி­யி­ன­ரும் எதிர்க்­கட்­சி­யி­ன­ரும் நேர்­மை­யு­டன் நடந்­து­கொள்­வது மிக­வும் முக்­கி­யம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!