ஊடுருவல் அச்சுறுத்தலை முறியடிக்க 'ஆப்பிள்' உடனடி நடவடிக்கை

ஊடுருவல் அச்சுறுத்தலை முறியடிக்க 'ஆப்பிள்' உடனடி நடவடிக்கை

1 mins read
0f938422-c37a-4e61-b074-8fdb2ecba826
-

நியூ­யார்க்: ஐஃபோன்­க­ளை­யும் ஐபேட்­டுக­ளை­யும் பாதிக்­க­வல்ல 'ஸீரோ கிளிக்' உளவு மென்­பொ­ரு­ளைத் தடுக்­கும் வித­மாக ஆப்­பிள் நிறு­வ­னம் 'ஐஓ­எஸ்' இயங்­கு­ த­ளத்தை மேம்­ப­டுத்தி இருக்­கிறது.

ஐஃபோன் பய­னா­ளர்­கள் ஓர் இணைப்­பைச் சொடுக்­கா­த­போ­தும் அல்­லது ஒரு கோப்­பைத் திறக்­கா­த­போ­தும் இணைய ஊடு­ரு­வி­கள் 'ஐமெ­சேஜ்' சேவை மூல­மாக அத்­தி­றன்­பே­சி­க­ளுக்­குள் ஊடு­ருவ முடி­யும் எனக் கூறப்­ப­டு­கிறது.

இந்­தப் பாது­காப்­புக் குறை­பாடு, ஆப்­பிள் நிறு­வ­னத்­தின் அனைத்து இயங்­கு­த­ளங்­க­ளை­யும் பாதிக்­க­வல்­லது என்று ஆய்­வா­ளர்­கள் கூறி­னர். இந்­தப் பாது­காப்­புக் குறை­பாட்டை டொரோன்டோ பல்­க­லைக்­க­ழ­கத்­தின் 'சிட்­டி­சன் லேப்' முதன்­மு­த­லில் சுட்­டிக்­காட்­டி­யது.

இஸ்­ரே­லைச் சேர்ந்த இணை­யக் கண்­கா­ணிப்பு நிறு­வ­ன­மான என்­எஸ்ஓ குழு­மம், அந்த உளவு மென்­பொ­ரு­ளின் பின்­ன­ணி­யில் இருப்­ப­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. இதனை அந்த நிறு­வ­னம் ஒப்­புக்­கொள்­ள­வும் இல்லை, மறுக்­க­வும் இல்லை என்று ராய்ட்­டர்ஸ் செய்தி தெரி­விக்­கிறது.

இத­னை­ய­டுத்து, விரைந்து செயல்­பட்ட ஆப்­பிள் நிறு­வ­னம், அந்­தப் பாது­காப்­புக் குறை­பாட்­டைச் சரி­செய்து, ஐஓ­எஸ் 14.8, ஐபேட்­ஓஸ் 14.8 என மேம்­ப­டுத்­தப்­பட்ட இயங்­கு­த­ளங்­களை வெளி­யிட்­டுள்­ளது. ஆப்­பிள் பய­னா­ளர்­கள் உட­ன­டி­யாக அவற்றை நிறு­விக்­கொள்­வது பாது­காப்­பா­னது.