சீனாவின் ஃபுஜியன் மாநிலத்தில் கொவிட்-19 பாதிப்பு இருமடங்கு அதிகரிப்பு

சீனாவின் ஃபுஜியன் மாநிலத்தில் கொவிட்-19 பாதிப்பு இருமடங்கு அதிகரிப்பு

2 mins read
c73a75c4-a7ad-47fb-8566-d215a97bf9c1
-

பெய்ஜிங்: சீனா­வின் தொன்­கி­ழக்கு மாநி­ல­மான ஃபுஜியனில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் சமூக அள­வில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை இரு­ம­டங்­குக்­கும் அதி­க­மாக ஏற்­றம் கண்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி ஃபூஜியன் மாநி­லத்­தில் மேலும் 59 பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது.

அதற்கு முந்­திய நாளில் 22 பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது.

கடந்த நான்கு நாட்­களில், ஃபூஜியன் மாநி­லத்­தில் மொத்­தம் 102 பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

அடுத்த மாதம் 1ஆம் தேதி­யன்று சீனா­வின் தேசிய தினத்தை முன்­னிட்டு ஒரு வார விடு­முறை தொடங்க இருக்­கும் நிலை­யில் சமூக அள­வி­லான பாதிப்பு அதி­க­ரித்­துள்­ளது. விடு­மு­றை­யின்­போது சுற்­றுப்­ப­ய­ணி­கள் பலர் ஃபூஜியன் மாநி­லத்­துக்­குச் செல்­வது வழக்­கம். அண்­மைய பாதிப்­பால் அம்­மா­நி­லத்­தின் சுற்­றுப்­ப­ய­ணத் துறைக்­குப் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதத்­தி­லி­ருந்து ஆகஸ்ட் மாதம் வரை ஏற்­பட்ட கிரு­மிப் பர­வ­லால் ஃபூஜியன் மாநி­லத்­தின் சுற்­றுப்­ப­ய­ணத்­துறை, உப­ச­ரிப்­புத்­துறை, போக்­கு­வ­ரத்­துத்­துறை ஆகி­யவை கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டன.

இம்­மா­தம் 10ஆம் தேதி­யன்று ஃபூஜியன் மாநி­லத்­தின் பூத்­தி­யேனே நக­ரில் கிரு­மித்­தொற்று தலை­தூக்­கி­யது.

பாதிக்­கப்­பட்­டோ­ரைப் பரி­சோ­தித்­துப் பார்த்­த­போது அவர்­கள் மிக வேக­மா­கப் பர­வக்­கூ­டிய டெல்டா கொவிட்-19 கிரு­மி­வ­கை­யால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

பூத்­தி­யேனே நக­ரி­லி­ருந்து கட­லோர நக­ர­மான சியா­மன்­னுக்கு கொவிட்-19 கிருமி பர­வி­யுள்­ளது. நேற்று முன்­தி­னம் அங்கு மேலும் 32 பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது.

இரு நக­ரங்­களிலும் கிரு­மித்­தொற்று அபா­யம் உள்ள இடங்­கள் மூடப்­பட்­டுள்­ளன.

பாலர் பள்­ளி­கள், தொடக்­கப்­பள்­ளி­கள், உயர்­நி­லைப்­பள்­ளி­கள், திரை­ய­ரங்­கு­கள், உடற்­ப­யிற்­சிக் கூடங்கள், மது­பா­னக் கூடங்­கள் ஆகிய இடங்­களும் மூடப்­பட்­டுள்­ளன.

கிட்டத்தட்ட 60 விழுக்காடு விமானச் சேவைகளை சியாமன் நகரம் நேற்று ரத்து செய்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் தரவு வழங்கும் 'வெரிபிளைட்' தெரி வித்தது.