கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்றைய நிலவரப்படி மேலும் 15,669 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் அந்நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2.011
மில்லியனாகப் பதிவாகியுள்ளது.
மலேசியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தொட ஒராண்டுக்கும் மேலானது.
ஆனால் அதனைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு மில்லியனைக் கடந்துவிட்டது.
மலேசியாவில் இதுவரை 21,124 பேர் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மாண்டுவிட்டனர்.
கடந்த ஜூலை மாதம் இறுதிக்குப் பிறகு நேற்று பதிவான அன்றாட பாதிப்பு ஆகக் குறைவானது.
தொடர்ந்து நான்கு நாட்களாக மலேசியாவில் அன்றாட பாதிப்பு குறைந்து வந்துள்ளது.
இந்நிலையில், கொவிட்-19
கட்டுப்பாடுகள் தொடர்பான செயல்முறைகளை எளிதாக்க மலேசியா நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போதுள்ள 181 செயல்முறைகள் 10ஆகக் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

