மொரிஷியஸில் கொவிட்-19 கோரத் தாண்டவம்

மொரிஷியஸில் கொவிட்-19 கோரத் தாண்டவம்

1 mins read
5be7321f-9a8f-4125-ae69-c02c04a7aea3
-

போர்ட் லுயிஸ்: மொரி­ஷி­ய­ஸில் கொவிட்-19 பாதிப்பு கட்­டுக்­க­டங்­கா­மல் போயி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த மூன்று வாரங்­க­ளுக்­குள் நாட்டை சுற்­றுப்­

ப­யணி­க­ளுக்­குத் திறந்­து­விட நட­வ­டிக்­கை­கள் எடுத்­து­வ­ரப்­பட்ட நிலை­யில், தற்­போது நெருக்­க­டி­நிலை அபாய கட்டத்தை எட்­டி­யி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மொரி­ஷி­ய­ஸில் பல­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யைச் சமா­ளிக்க முடி­யா­மல் மருத்­து­வ­ம­னை­கள் திண­றி­ வ­ரு­வ­தா­க­வும் செய்­தி­கள் வெளி­யாகி உள்­ளது. போது­மான செயற்கை சுவா­சக் கரு­வி­களும் இல்லை என்று அதி­கா­ரி­கள் கவலை தெரி­வித்­த­னர்.

அது­மட்­டு­மல்­லாது, கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக மாண்­டோரை அடக்­கம் செய்­ய­வும் மொரி­ஷி­ய­ஸின் பிர­தான இடு­காட்­டில் இடம் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த இரண்டு மாதங்­களில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை ஐந்து மடங்கு அதி­க­ரித்­துள்­ளது. பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 12,600க்கும் அதி­கம் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். இது அந்­நாட்­டின் ஒவ்­வொரு 100,000 குடி­மக்­க­ளுக்­கும் 1,005 பேருக்­குச் சமம். மொரி­ஷிய­ஸின் முன்­னாள் பிர­த­ம­ரான 74 வயது நவீன் ராம்­கூ­லம் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றல் பாதிக்­கப்­பட்­டுள்­ளார். மொரி­ஷி­யஸ் மருத்­து­வ­ம­னை­களில் இடம் இல்­லாத கார­ணத்­தால் சிகிச்­சைக்­காக அவர் இந்­தி­யா­வுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளார்.