ஒரே வாரத்தில் 2வது ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா

ஒரே வாரத்தில் 2வது ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா

1 mins read
5ffec3ff-9e71-4b51-8cef-02fc7c580671
வடகொரியா இரு ஏவுகணைகளைப் பாய்ச்சிய காணொளியை தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

சோல்: முதல் ஏவு­க­ணைச் சோத­னையை வட­கொ­ரியா நடத்தி ஒரு வாரம்­கூட ஆகாத நிலை­யில் நேற்று இரண்­டா­வது சோத­னையை நடத்­தி­யது. ஒரே வாரத்­தில் பியோங்­யாங்­கின் இரண்­டா­வது பிர­தான ஆயு­தச் சோதனை இது.

தீப­கற்­பத்­தின் கிழக்­குக் கரைப்­பகு­தி­யின் நீரி­ணை­யில் வட­கொரியா இரு ஏவு­க­ணை­களை நேற்று பகல் பாய்ச்­சி­ய­தாக தென்­கொ­ரிய தற்­காப்பு உயர் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஜப்­பா­னிய கட­லோ­ரக் காவற்­படை வெளி­யிட்ட அறிக்­கை­யும் அதே தக­வலை எதி­ரொ­லித்­தது. ஜப்­பா­னின் பிரத்­தி­யேக பொரு­ளி­யல் பகு­திக்கு வெளியே இரண்டு ஏவு­க­ணை­களும் தென்­பட்­ட­தாக அறிக்­கை­யில் அது குறிப்­பிட்­டி­ருந்­தது. கடந்த வார­யி­று­தி­யில் புதிய நெடுந்­தொ­லைவு ஏவு­க­ணை­களை வட­கொ­ரியா சோதித்­துப் பார்த்­ததை அடுத்து நேற்­றைய சோதனை நடந்­துள்­ளது. ஜப்­பான், தென்­கொரியா ஆகிய நாடு­க­ளுக்கு எதி­ராக, அணு­வா­யு­தத் தாக்­கு­தல்­களை நடத்­தும் ஆற்­றல் தன்­னி­டம் உண்டு என்­பதைக் குறிக்­கும் வகை­யில் இந்த ஏவு­க­ணைச் சோத­னை­கள் அமைந்­துள்­ளன.

இதற்­கி­டையே, அணு­வாற்­றல் கொண்ட நாட்­டின் முதல் ஆயு­த­மாக இந்த ஏவு­கணை இருக்­க­லாம் என்று ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­றனர்.

அமெ­ரிக்கா விதித்­துள்ள தடை­க­ளி­லி­ருந்து நிவா­ர­ணம் பெற, தன் அணு­வாற்­றல், ஏவு­க­ணைத் திட்­டங்­களை வட­கொ­ரியா கைவி­ட­வேண்­டும் என்­பது தொடர்­பான பேச்­சு­வார்த்தை, 2019ஆம் ஆண்டு­மு­தல் முடக்க நிலை­யில் இருந்து வருகிறது.