சரவாக் செல்வோருக்குத் தனிமை உத்தரவு கிடையாது

சரவாக் செல்வோருக்குத் தனிமை உத்தரவு கிடையாது

1 mins read
77dc164b-10a7-4501-b9c1-d77f7fabc77f
-

கூச்­சிங்: மலே­சி­யா­வின் மற்ற மாநி­லங்­க­ளி­லி­ருந்து சர­வாக் வரு­வோர், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருந்­தால், அவர்­க­ளுக்­குத் தனிமை உத்­தரவு கிடை­யாது என்று சர­வாக் அர­சாங்­கம் நேற்று அறி­வித்­தது. இது இன்­று­மு­தல் நடை­மு­றைப்­படுத்­தப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், அனைத்­துப் பயணி­களும் சர­வாக் மாநி­லத்­திற்­குள் வரு­வ­தற்­கான 'எண்­டர்­ச­ர­வாக்' படி­வத்தை நிறைவு செய்து சமர்ப்­பிக்க வேண்­டும் என்று கூறப்­பட்­டது. அத்­து­டன் சுகா­தார உறுதி ஆவ­ணத்­தை­யும் அவர்­கள் இணை­யம் வாயி­லா­கச் சமர்ப்­பிக்க வேண்­டும்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தற்­கான ஆதா­ரத்­தை­யும் அவர்­கள் வழங்க வேண்­டும் என்று கூறப்­பட்­டது.

சர­வாக் வரு­வ­தற்கு மூன்று நாட்­களுக்கு முன், 'ஆர்டி-பிசி­ஆர்' பரி­சோ­த­னையை அவர்­கள் செய்­து­கொண்டு அதில் கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­த­வும் வேண்­டும்.

இதற்­கி­டையே, நேற்று மலே­சி­யா­வில் பதி­வான புதிய கொவிட்-19 சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை, மீண்­டும் 19,000ஐத் தாண்­டி­யது. சர­வாக் மாநி­லத்­தில்­தான் ஆக அதி­க­மாக, 4,709 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.