சீனா: ஒரு பில்லியன் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி

சீனா: ஒரு பில்லியன் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி

1 mins read
a1f00e18-48d1-44b6-a655-42b26b377c22
-

பெய்ஜிங்: சீனாவில் பில்லியன் பேருக்கு முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது சீனாவின் மக்கள்தொகையில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். புதன்கிழமை நிலவரப்படி சீனாவில் இதுவரை 2.16 பில்லியன் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மி ஃபெங் சொன்னார். 1.01 பில்லியன் மக்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இதன்மூலம் உலகின் மிகப்பெரிய பொருளியலைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், அதிகமானோருக்குத் தடுப்பூசி போட்டு சீனா முன்னிலை வகிக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஜப்பானில் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பிரிட்டன், ஜெர்மனியில் 60 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புளூம்பர்க் தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் வெறும் 15 விழுக்காட்டினருக்கும் குறைவானவர்களே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

உலகளவில் போடப்பட்டுள்ள 5.18 பில்லியன் தடுப்பூசிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சீனாவில் போடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் 800 மில்லியன் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கும் அனுப்பியுள்ளது சீனா. கிட்டத்திட்ட 10 மாதங்களுக்கு முன்னர், சீனத் தயாரிப்பான சினோவேக் தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டுக்கான அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் பிறகு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேலும் ஆறு தடுப் பூசிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.