சீனாவைக் கட்டுப்படுத்த கைகோக்கும் நாடுகள்

வாஷிங்­டன்: இந்தோ-பசி­பிக் பகு­தி­யில் அதி­க­ரித்து வரும் சீனா­வின் செல்­வாக்கு, ராணுவ நட­மாட்­டம் குறித்து பிரிட்­டன், அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­கள் கவலை கொண்­டுள்ளன.

இந்நிலை­யில், அந்­நா­டு­களுக்கு இடை­யில் மேம்­பட்ட பாதுகாப்பு தொழில்­நுட்­பங்களைப் பகிர்ந்து கொள்­வ­தற்­கான பாது­காப்பு ஒப்­பந்­தம் ஒன்றை அவை அறி­வித்­துள்­ளன.

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன், பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் ஆகி­யோர் காணொளி வழி­யாக ஆக்­சஸ் எனும் முத்தரப்பு கூட்டு திட்­டத்­தின் கீழ் இந்த ஒப்­பந்­தம் குறித்து நேற்று அறி­வித்­த­னர்.

இதன்­படி ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அணு­வா­யுத சக்­திக் கொண்ட நீர்­மூழ்­கிக் கப்­பல் கிடைப்­ப­தற்கு, அமெ­ரிக்கா உதவ முன்­வந்து

உள்­ளது.

இணை­யத் திறன்­கள், செயற்கை நுண்­ண­றிவு, குவாண்­டம் தொழில்­நுட்­பம், கட­லுக்கு அடி­யில் கூடு­தல் திறன் ஆகி­ய­வற்­றி­லும் இந்த

ஒப்­பந்­தம் கவ­னம் செலுத்­தும் என்­றும் ஒப்பந்தம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் படைத் திறனை மேம்படுத்தி அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரு வதே இந்தக் கூட்டுத் திட்டத்தின் நோக்கம் என்றும் அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில், குறிப்­பாக சர்ச்­சைக்­கு­ரிய தென் சீனக் கடற்­ப­கு­தி­யில் சீனா­வின் ராணுவ நட­மாட்­டத்­தைக் கண்

காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகை­யி­லும் அதன் செயல்­பா­டு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யி­லும் வர­லாற்று சிறப்­பு­மிக்க இந்த ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால், இந்த ஒப்­பந்­தம் சீனாவை இலக்­கா­கக் கொண்­ட­தல்ல என்று அமெ­ரிக்காவின் மூத்த நிர்­வாக அதி­கா­ரி­கள் வலி­யு­றுத்தி கூறி­னர்.

அதே­ச­ம­யம் இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் அமை­தியை நிலை­நி­றுத்­து­வ­தும் பாது­காப்பை உறுதி செய்­வ­துமே இந்த ஒப்­பந்­தத்­தின் நோக்­கம் என்­றும் அவர்­கள் கூறி­னர்.

இந்த ஒப்­பந்­தத்­தால் சீனா மட்­டு­மல்­லா­மல், பிரான்­சும் பாதிக்­கப் படும் என்று கூறப்­ப­டு­கிறது.

ஏனெ­னில், ஆஸ்­தி­ரே­லிய கடற்

­ப­டைக்கு 12 நீர்­மூழ்­கிக் கப்­பல்­

க­ளைத் தயா­ரிப்பதற்காக, பிரான்ஸ் சுமார் பல பில்­லி­யன் டாலர் மதிப்­பி­லான ஒப்­பந்­தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இது ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மிகப்­பெ­ரிய ஆயு­தத் தள­வாட ஒப்­பந்­த­மா­கும்.

ஆனால் அமெ­ரிக்­கா­வு­ட­னான இந்த ஒப்­பந்­தத்­தில் பங்­கேற்­ப­தற்­காக, பிரான்­சு­ட­னான ஒப்­பந்­தத்தை ஆஸ்­தி­ரே­லியா ரத்து செய்­தி­ருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!