சீனா: ஒரு பில்லியன் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி

சீனா: ஒரு பில்லியன் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி

1 mins read
7488df67-3d20-488e-b3ab-dc4cb9e1a790
-

பெய்­ஜிங்: சீனா­வில் பில்­லி­யன் பேருக்கு முழு­மை­யாக கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. இது சீனா­வின் மக்­கள்தொ­கை­யில் 70 விழுக்­காட்­டிற்­கும் அதி­க­மா­கும்.

புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி சீனா­வில் இது­வரை 2.16 பில்­லி­யன் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக தேசிய சுகா­தார ஆணை­யத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் மி ஃபெங் சொன்­னார்.

1.01 பில்­லி­யன் மக்­க­ளுக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்

­னார்.

இதன்­மூ­லம் உல­கின் மிகப்­பெ­ரிய பொரு­ளி­ய­லைக் கொண்ட நாடு­க­ளின் பட்­டி­ய­லில், அதி­க­மா­னோ­ருக்­குத் தடுப்­பூசி போட்டு சீனா முன்­னிலை வகிக்­கிறது.

அமெ­ரிக்கா மற்­றும் ஜப்­பா­னில் மக்­கள்­தொ­கை­யில் பாதிக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு முழு­மை­யாக தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

பிரிட்­டன், ஜெர்­ம­னி­யில்

60 விழுக்­காட்­டி­ன­ருக்­கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக புளூம்­பர்க் தர­வு­கள் கூறு­கின்­றன.

இந்­தி­யா­வில் வெறும் 15 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் குறை­வா­ன­வர்­களே முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

உல­க­ள­வில் போடப்­பட்­டுள்ள 5.18 பில்­லி­யன் தடுப்­பூ­சி­களில் மூன்­றில் ஒரு பங்­கிற்­கு மேல் சீனா­வில் போடப்­பட்­டுள்­ளது.

இது மட்­டு­மல்­லா­மல் 800 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை மற்ற நாடு­க­ளுக்­கும் அனுப்­பி­யுள்­ளது சீனா.

கிட்­டத்­திட்ட 10 மாதங்­க­ளுக்கு முன்­னர், சீனத் தயா­ரிப்­பான சினோ­வேக் தடுப்­பூ­சிக்கு அவ­சர பயன்­பாட்­டுக்­கான அனு­மதி அளிக்­கப்­பட்­டது.

அதன் பிறகு உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட மேலும் ஆறு தடுப்­

பூ­சி­க­ளுக்­கும் அனு­மதி அளிக்­கப்­பட்­டது.