மீண்டும் பள்ளிகளைத் திறக்க வலியுறுத்தும் யுனிசெஃப்
மணிலா: கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக பல நாடுகளில் சுமார் 18 மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை விரைவில் திறக்கு மாறு ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது. சுமார் 17 நாடுகளில் பள்ளிகள் முழுமையாகவும் 39 நாடுகளில் ஒரு சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாகவும் யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது.
சீனாவில் நிலநடுக்கம்; மூவர் பலி
பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கே சீச்சுவான் மாநிலத்தில் லுஜவ் நகரில் நேற்று 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு லுக்சியான் பகுதி கிராமம் ஒன்றில் மூவர் பலியாகினர். 60 பேர் காயமடைந்த னர். 35 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து 7 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
'காற்று தூய்மைகேட்டிற்கு அதிபரின் கவனக்குறைவே காரணம்'
ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நிலவும் மோசமான காற்றுத் தூய்மைகேட்டிற்கு அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ உள்ளிட்ட பிற உயர் அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்று அந்நாட்டு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கண்காணிப்பு மையங்கள் அமைக்கவேண்டும் என்பது உட்பட காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜகார்த்தாவைச் சேர்ந்த 32 பேர் காற்று மாசு குறித்து தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கூறியது.
ஹாங்காங்: கொவிட்-19 கூடுதல் தடுப்பூசி தேவையில்லை
ஹாங்காங்: கொவிட்-19 கூடுதல் தடுப்பூசி போடுவதற்கு அவசரப்பட வேண்டியதில்லை என்று ஹாங்காங் அரசாங்க சுகாதார ஆலோசகர்கள் கூறியுள்ளனர். உலக நாடுகள் பலவும் கூடுதல் தடுப்பூசி போட அவசரம் காட்டி வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக கூறியுள்ளது ஹாங்காங். கடந்த மூன்று மாதங்களில் கிருமிப் பரவல் இல்லாததால் கூடுதல் தடுப்பூசிக்கான அவசியம் இல்லை என்று ஹாங்காங் கூறுகிறது.

