உலகின் ஆக உயரமான பதின்ம வயது ஆடவர்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்

உலகின் ஆக உயரமான பதின்ம வயது ஆடவர்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்

1 mins read
0a6ab8f9-4a2d-46dc-b394-0ba33f433fe0
ஆக நீளமான காதுகளை உடைய நாய் முதல் உலகின் ஆக உயரமான பதின்ம வயது நபர் வரை பல்வேறு அதிசயங்கள் அந்தப் பதிப்பில் இடம்பெற்று உள்ளன. படங்கள்: கின்னஸ் உலக சாதனை -

கின்னஸ் உலக சாதனை அமைப்பு ஆக அண்மைய சாதனையாளர்களின் பட்டியலை தனது 2022ஆம் ஆண்டுக்கான கின்னஸ் பதிப்பில் வெளியிட்டுள்ளது.

அந்த வருடாந்திர பதிப்பு வியாழக்கிழமை (செப்டம்பர் 16) வெளியானது. ஆக நீளமான காதுகளை உடைய நாய் முதல் உலகின் ஆக உயரமான பதின்ம வயது நபர் வரை பல்வேறு அதிசயங்கள் அந்தப் பதிப்பில் இடம்பெற்று உள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த கட்டுடல் ஆர்வலரான பெத்தானி லாட்ஜ் என்பவர் 100 மீட்டர் தூரத்தை முன்பக்கமாக உருண்டவாறே 42.64 வினாடிகளில் கடந்தார். அதேபோல பின்பக்கமாக தாவிக்குதித்தும் அந்தரத்தில் உருண்டவாறும் 30 வினாடிகளில் அந்தத் தூரத்தைக் கடந்து பெண்கள் பிரிவில் சாதனையாளராகத் தேர்வானார்.

மற்றொரு சாதனையாளரான ஸியோன் கிளார்க், பிறவியிலேயே கால்கள் இல்லாத நிலையில் 20 மீட்டர் தூரத்தை மிக வேகமாக 4.78 வினாடிகளில் கைகளால் கடந்தார்.

லயிட்டிஸியா கை என்னும் ஐவரி கோஸ்ட் மங்கை, தலைமுடியால் 30 வினாடிகளில் 60 முறை தாவிக்குதித்து (ஸ்கிப்பிங்) சாதித்தார்.

உலகின் ஆக உயரமான பதின்ம வயது ஆடவர் என்னும் பட்டம் ஒலிவியர் ரிவோக்ஸ் என்னும் அமெரிக்கருக்கு வழங்கப்பட்டது. அவரது உயரம் 226.9 சென்டிமீட்டர்.