வெலிங்டன்: ஆஸ்திரேலியா
வுடனான சிறப்பு இருவழிப் பயண ஏற்பாட்டை நியூசிலாந்து மேலும் எட்டு வாரங்களுக்கு நிறுத்திவைத்துள்ளது.
இருநாடுகளிலும் புதிதாக டெல்டா கொவிட்-19 கிருமித்தொற்றால் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு இருவழிப் பயணத்தின்படி பயணிகள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். ஆனால் கிருமித்தொற்று நிலை மோசமடைந்திருப்பதால் இந்த ஏற்பாடு இப்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என்று இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பயண ஏற்பாடு அறி
முகப்படுத்தப்பட்ட சில வாரங்களிலேயே, கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதியன்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன்
நகரங்களில் டெல்டா கொவிட்-19 கிருமி வகை பரவல் ஏற்பட்டதால் பயண ஏற்பாடு நிறுத்திவைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக நிறுத்தம் இம்மாதம் 24ஆம் தேதியுடன் முடிவுடையும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.
டெல்டா கிருமியால் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்தின்
ஆக்லாந்து நகருக்குப் பயணம் மேற்கொண்டதை அடுத்து, கொவிட்-19 பாதிப்பு இல்லாமல் இருந்த நியூசிலாந்தில் கிருமித்தொற்று மீண்டும் தலைதூக்கியது.
தற்போது ஆக்லாந்தில் முடக்கநிலை நடப்பில் உள்ளது. நியூசிலாந்தின் மற்ற பகுதிகளில் முடக்கநிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
"ஆக அண்மைய கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பலன் அளித்துள்ளன.
"அடுத்த வாரத்துக்குள் கட்டுப்பாடுகளைத் தளர்த்த இலக்கு கொண்டுள்ளோம்.
"இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடனான சிறப்பு இருவழிப் பயணத்தை மீண்டும் தொடர்ந்தால் எங்களுடைய இத்தனை நாள் கடும் உழைப்புக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்," என்று கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்கொள்ளும் பிரிவுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுடனான சிறப்பு இருவழிப் பயணத்தை மீண்டும் தொடர்வது குறித்து நியூசிலாந்து அரசாங்கம் அடுத்த மாதம் மறுஆய்வு செய்யும் என்று அவர் கூறினார்.
நேற்றைய நிலவரப்படி நியூசிலாந்தில் புதிதாக 11 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. புதிய கொவிட்-19 அலையால் அந்நாட்டில் இதுவரை 1,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, டெல்டா கொவிட்-19 கிருமிப் பரவலை முறி
யடிக்கும் இலக்கை தமது நாடு நெருங்குவதாக நியூசிலாந்துப்
பிரதமர் ஜெசின்டா ஆர்டன் தெரிவித்தார்.
தடுப்பூசி போடும் திட்டத்தை மேலும் விரைவுபடுத்த ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகளி
லிருந்து நியூசிலாந்து கூடுதல் தடுப்பூசிகளை வாங்குகிறது.

