கோலாலம்பூர்: மலேசியாவில் 76.8 (17,973,545) விழுக்காடு பெரியவர்கள் முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுவிட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
92.7 விழுக்காடு பெரியவர்கள் குறைந்தது முதல் தடுப்பூசியைப் போட்டுவிட்டதாக சுகாதாரத் துறை டுவிட்டரில் பதிவிட்டது.
நேற்று 202,298 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டதாக மலேசிய சுகா
தாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில் 61,108 பேர் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.
140,190 பேர் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று மலேசியாவின் தேசிய கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் இதுவரை 39,685,414 பேர் குறைந்தது முதல் தடுப்பூசியைப் போட்டுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி ஜோகூர் மாநிலத்தில் 30,484 பேரும் சாபாவில் 16,351 பேரும் தலைநகர் கோலாலம்பூரில் 15,863 பேரும் சிலாங்கூரில் 14,016 பேரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டு விட்டனர்.

