யங்கூன்: அதிகாரம் இழந்த முன்னாள் மியன்மார் தலைவர் திருவாட்டி ஆங் சான் சூச்சிக்கு எதிராக அந்நாட்டைத் தற்போது ஆட்சி செய்து வரும் ராணுவம் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
திருவாட்டி சூச்சிக்கு எதிராக மியன்மார் ராணுவம் அடுக்கடுக்காகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் பல ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்படலாம் என்றும் திருவாட்டி சூச்சியின் வழக்கறிஞர் தெரிவித்தார். மியன்மார் மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து 76வயது திருவாட்டி சூச்சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருவாட்டி சூச்சிக்கு எதிரான புதிய வழக்கு விசாரணை அடுத்த மாதம் 1ஆம் தேதியன்று தலைநகர் நேப்பிடாவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

