அதிகாரப் போட்டி குறித்து இந்தோனீசியா கவலை

அதிகாரப் போட்டி குறித்து இந்தோனீசியா கவலை

1 mins read
f006d7f0-2792-4f6e-931d-ba871c362dc6
-

ஜகார்த்தா: தென்­கி­ழக்­கா­சி­யா­வில், குறிப்­பாக தென்­சீ­னக்

கட­லில் அதி­காரம், ஆயு­தப் போட்டி நில­வும் அபா­யம் இருப்­ப­தாக இந்­தோ­னீ­சியா கவலை தெரி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்கா, பிரிட்­டன், ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­கள் இணைந்து இந்தோ-பசி­பிக் பாது­காப்­புக் கூட்­ட­ணியை அமைத்­துள்­ளன.

இந்­தக் கூட்­ட­ணி­யின் ஒரு பகு­தி­யாக அணு­வா­யு­தம் பொருந்­திய நீர்­மூழ்­கிக் கப்­பல்க­ளைக் கொள்­மு­தல் செய்ய ஆஸ்­தி­ரே­லியா திட்­ட­மிட்­டுள்­ளது.

தென்­சீ­னக் கட­லில் சீனா அதன் அதி­கா­ரத்­தைக் காட்டி வரும் வேளை­யில் அதை எதிர்­கொள்ள இந்த முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதாகத் தெரிவிக்கப் பட்டது. இதற்­குச் சீனா கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நிலை நீடித்­தால் தென்­

கி­ழக்­கா­சி­யா­வுக்கு ஆபத்து ஏற்­ப­டக்­கூ­டும் என்று இந்­தோ­னீ­சிய வெளி­யு­றவு அமைச்சு நேற்று அறிக்கை வெளி­யிட்­டது.