ஆப்கானிஸ்தான்: பள்ளிகளில் பெண்களுக்கு இடமில்லை

1 mins read
8d2c7daa-858f-4e7e-ae79-ff556bb4fe3e
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செப்டம்பர் 15ஆம் தேதி பள்ளி வகுப்பறையில் காணப்படும் மாணவிகள். படம்: ஏஎஃப்பி -

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் அந்நாட்டு ஆண் ஆசிரியர்களையும் ஆண் மாணவர்களையும் உயர்நிலைப் பள்ளிகளுக்குத் திரும்பும்படி உத்தரவிட்டு உள்ளனர். இதன்வழி 13 முதல் 18 வயது வரையிலான பெண்களுக்கு உயர்நிலைக் கல்வியில் இடமில்லை என்று அவர்கள் கோடிகாட்டி உள்ளனர். அங்கு சனிக்கிழமை (செப்டம்பர் 18) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

பள்ளிக் கதவு மூடியதால்தங்கள் எதிர்காலம் இருண்டுவிட்டது என்று பள்ளி செல்லும் பெண்கள் சிலர் கூறினர்.

1990களில் நடந்த தலிபான் ஆட்சியில் பெண்கள் பள்ளிக்கோ வேலைக்கோ போக அனுமதிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானைக் கடந்த மாதம் மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள், இந்த முறை அவர்களின் ஆட்சியில் சில தளர்வுகள் இருக்கும் என்று உறுதி கூறியிருந்தனர்.

ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்வி பற்றி ஆழ்ந்த கவலை கொள்வதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்