ஆஸ்திரேலியா: ஆர்ப்பாட்டம் செய்த 267 பேர் கைது

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­ய போலி­சார், அனு­ம­தி­யின்றி பொது­மு­டக்­கத்­துக்கு எதி­ராக சிட்னி, மெல்­பர்ன் நக­ரங்­களில் நேற்று ஆர்ப்­பாட்­டம் செய்த நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­களில் 267 பேரைக் கைது செய்­த­னர். மெல்­பர்­னில் 235 பேரும் சிட்­னி­யில் 32 பேரும் கைது­செய்­யப்­பட்­ட­னர். பல போலிஸ் அதி­கா­ரி­கள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளு­டன் நடந்த கை கலப்­பில் காயம­டைந்­த­னர்.

ஆறு போலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு மருத்­து­வ­மனை சிகிச்சை தேவைப்­பட்­ட­தாக விக்­டோ­ரியா மாநி­லப் போலி­சார் கூறி­னர். போலி­சார் பலர் கீழே தள்­ளி­வி­டப்­பட்­ட­தை­யும் மிதி­பட்­ட­தை­யும் தொலைக்­காட்­சி­கள் காட்­டின.

மெல்­பர்ன் நக­ரின் மையப் பகுதி யில் ஆள் நட­மாட்­டத்­தைத் தடுக்க, அங்கு நேற்று 2,000 போலிஸ் அதி­கா­ரி­கள் நிறுத்­தப்­பட்­ட­து­டன், தடுப்­பு­களும் சோத­னைச்­சா­வ­டி­களும் போடப்­பட்­டன. பொதுப் போக்­கு­ வரத்­தும் தனி­யார் டாக்­சி­களும் நிறுத்தி வைக்­கப்­பட்­டன. இருப்­பி­னும் சுமார் 700 ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் அங்கு திரண்­ட­னர்.

சிட்­னி­யி­லும் பலத்த போலிஸ் பாது­காப்பு போடப்­பட்­டி­ருந்­தது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஜூன் மாதத்­தில் தொடங்­கிய டெல்டா வகைக் கிரு­மிப்­ப­ர­வ­லால், சிட்னி, மெல்­பர்ன், கான்­பெரா நக­ரங்­களில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

அந்­நாட்­டில் நேற்று புதி­தாக 1,882 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் 1,331 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­யின. பெரும்­பா­லா­னவை சிட்­னி­யில் ஏற்­பட்­டவை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!