சினமடைந்து தூதர்களை மீட்டுக்கொண்ட பிரான்ஸ்: ஆஸ்திரேலியா வருத்தம்

சினமடைந்து தூதர்களை மீட்டுக்கொண்ட பிரான்ஸ்: ஆஸ்திரேலியா வருத்தம்

2 mins read
456cd334-672b-495c-85f9-a3dcc3f0bf75
-

பாரிஸ்: பிரான்ஸ், தனக்­குக் கிடைக்க வேண்­டிய நீர்­மூழ்­கிக் கப்­பல் குத்­தகை கைவிட்­டுப் போன பின்­னர் அமெ­ரிக்­கா­வுக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­கு­மான அதன் தூதர்­களை ஆலோ­ச­னைக்­காக அந்­நா­டு­க­ளி­லி­ருந்து மீட்­டுக்­கொண்­டுள்­ளது. அது குறித்த உத்­த­ரவை பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வேல் மேக்­ரோன் நேற்று முன்­தி­னம் பிறப்­பித்­தார்.

பிரெஞ்சு நீர்­மூழ்­கிக் கப்­பல்­களை வாங்க பாரி­சு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­திக்­கொண்­டி­ருந்த கான்­பெரா அத­னி­டம் தெரி­விக்­கா­மல், அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து கப்­ப­லை­களை வாங்க ஒப்­பந்­தம் செய்­தது. அத­னைத் தொடர்ந்து தூதர்­கள் உட­ன­டி­யாக மீட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தாக பிரெஞ்சு வெளி­யு­றவு அமைச்­சர் ழான்-யுவேஸ் லே டிரி­யன் கூறி­னார்.

அமெ­ரிக்­கா­வும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் கடந்த 15ஆம் தேதி செய்த அறி­விப்­பின் 'தீவி­ரத்­தன்­மை­யால்' இத்­த­கைய 'தீவிர' நட­வ­டிக்கை தேவைப்­பட்­ட­தாக பிரெஞ்சு அமைச்­சர் தெரிவித்தார்.

கடந்த 2016ஆம் நடந்த இரு­நாட்­டுப் பேச்சுவார்த்­தையை ஆஸ்­தி­ரே­லியா இப்­படி கைவிட்டதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று அவர் தெரி­வித்­தார்.

பாரிஸ் அதன் தூதர்­களை ஒரு நாட்­டி­லி­ருந்து இவ்­வாறு மீட்­டுக்­கொண்­டது இதுவே முதல் முறை என்று அர­ச­தந்­தி­ரி­கள் கூறி­னர்.

பிரான்­சின் அந்த முடிவு தனக்கு வருத்­தமளிப்­ப­தாக ஆஸ்­தி­ரே­லியா நேற்று குறிப்­பிட்­டது. ஆனால் பிரான்­சு­டான உறவை மதிப்­ப­தா­க­வும் மற்ற பல விவ­கா­ரங்­களில் அத­னு­டன் தொடர்ந்து உரை­யா­டப் போவ­தா­க­வும் அது கூறி­யது.

ஒப்­பந்­தத்­தின்­படி அமெ­ரிக்கா அணு­வாற்­றல் தொழில்­நுட்­ப­முள்ள நீர்­மூழ்­கிக் கப்­பல்­க­ளை­யும் நுண் ணறிவு ஆற்­றல்­க­ளை­யும் ஆஸ்­திரே லியா­வுக்கு வழங்­கும். சீனா­வின் வளர்ச்­சி­யைத் தடுப்­பதே அதன் நோக்­கம் என்று கரு­தப்­ப­டு­கிறது.

ஆனால் 50 பில்­லி­யன் ஆஸ்தி ரேலிய டாலர் ஒப்­பந்­தம் பிரான்­சின் கைவிட்­டுப் போய்­விட்­டது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு மலே­சியா

அறி­வு­றுத்­தல்

இவ்­வே­ளை­யில் அமெ­ரிக்கா ஆஸ்­தி­ரே­லியா ஒப்­பந்­த­மும், அந்நாடுகள் பிரிட்­ட­னும் சேர்ந்து அறி­வித்­துள்ள மூன்று நாட்டு 'ஆக்­கஸ்' பங்­கா­ளித்­து­வமும் இந்தோ பசி­ஃபிக் வட்­டா­ரத்­தில் ஆயு­தப் போட்­டாப் போட்­டியை ஏற்­ப­டுத்­தக் கூடும் என்று மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் எச்­ச­ரித்­துள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­ச­னு­டன் நேற்­று­முன்­தி­னம் நடந்த தொலை­பேசி உரை­யா­ட­லின்­போது மலே­சி­யப் பிர­த­மர் அவ்­வாறு கூறி­ய­தாக அந்­நாட்டு ஊட­கங்­கள் கூறின.