வெற்றிகரமாக முடிந்த முதல் விண்வெளி சுற்றுலாப் பயணம்

வெற்றிகரமாக முடிந்த முதல் விண்வெளி சுற்றுலாப் பயணம்

1 mins read
fe36e6de-0f35-4535-9285-3290f4bd9105
-

நியூயார்க்: 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. சென்ற வியாழக்கிழமையன்று மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஃபால்கன் ராக்கெட் மூலம் விண்வெளி வீரர்களாக பயிற்சி பெறாத நான்கு பேர் விண்வெளிக்குச் சுற்றுலா சென்றனர்.

விண்கலத்தில் சென்ற 4 பேரும் இசைக்கருவி வாசிப்பது போலவும் ஓவியம் வரைந்தும் காணொளி ஒன்றை வெளி யிட்டனர். 3 நாள் பயணத்தை நிறைவுசெய்து சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை ஏழு மணியளவில் ஃபுளோரிடாவின் அட்லாண்க் கடலோரத்தில் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாக வும் விண்கலம் தரையிறங்கியது.