மெல்பர்ன்: நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவது தொடர்பிலான ஆஸ்திரேலியாவின் கவலைகள் குறித்து பிரான்ஸ் முன்பே அறிந்திருக்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று சொன்னார்.
நீர்மூழ்கிக் கப்பல்கள் விவகாரத்தில், நட்பு நாடுகள் தங்கள் முதுகில் குத்திவிட்டதாக பிரான்ஸ் கூறியதற்குப் பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு சொன்னார்.
இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியா வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பதாக அந்நாட்டு தற்காப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் நேற்று சொன்னார்.
இதுபற்றி பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன், பிரெஞ்சு அரசாங்கத்தின் ஏமாற்றம் தனக்குப் புரிகிறது என்றார். இருப்பினும் சில மாதங்களுக்கு முன்பே ஒப்பந்தம் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து பிரான்சிடம் தெரிவித்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.
"நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது குறித்த பிரான்சுடனான ஒப்பந்தம், எங்கள் நாட்டு நலன்
களைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்ற எங்களின் ஆழமான கவலை அவர்
களுக்குத் தெரிந்து இருக்கும்.
"நாட்டு நலனை முன்னிட்டுதான் இதில் முடிவெடுக்கப்படும் என்பதும் அவர்களுக்குத் தெளிவு
படுத்தப்பட்டிருந்தது," என்று செய்தி
யாளர் சந்திப்பு ஒன்றில் அவர் சொன்னார்.
உளவுத்துறை, பாதுகாப்புத் துறைகளின் ஆலோசனைகளுக்கு எதிரான ஒப்பந்தத்தைத் தொடர்வது 'அலட்சியப்படுத்துவதாக' இருக்கும் என்றும் அவ்வாறு செய்வது ஆஸ்திரேலியாவின் நலன்களுக்கு எதிரானது என்றும் கூறினார்.
அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு ஏதுவாக பல பில்லியன் டாலர் மதிப்பில் பிரான்சிடம் வாங்கவிருந்த ஒப்பந்தத்தில் இருந்து ஆஸ்திரேலியா விலகியதால் பிரான்ஸ் கோபமடைந்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கான தனது தூதர்களைத் திரும்ப அழைத்துக்கொண்ட பிரான்ஸ், தனது நட்பு நாடுகள் இத்திட்டங்கள் பற்றி தன்னிடம் பொய் கூறியதாகவும் சாடியது.
இந்த ஒப்பந்தத்தால், எதிர்பாராத வகையில் பிரான்சுடன் அரசதந்திர ரீதியிலான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது அமெரிக்கா.
பிரான்சுடன் மட்டுமல்லாமல், ஐரோப்பா-அமெரிக்கா உறவிலும் இது நீண்டகால பாதிப்பை ஏற்
படுத்தக்கூடும் என கருதப்படுகிறது.

