பழங்கள் இறக்குமதிக்கு சீனா தடை; மிரட்டும் தைவான்

தைப்பே: தைவா­னில் இருந்து குறிப்­பிட்ட பழங்­களை இறக்­கு­மதி செய்­வதை சீனா நிறுத்­தி­யுள்­ளதை அடுத்து, இந்த விஷ­யத்தை உலக வர்த்­தக மையத்­திற்­குக் கொண்டு செல்­லப்போவ­தாக தைவான் மிரட்டியுள்­ளது.

தைவான் தனது நாட்­டின் ஒரு பகுதி என்று நீண்ட காலமாகக் கூறி வரும் சீனா, தனது இறை­யாண்­மையை தைவான் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்ற நோக்­கில் அர­சி­யல், ராணுவ ரீதி­யில் நெருக்­கடி கொடுத்து வரு­கிறது.

அந்த வகை­யில் இரு நாடு­

க­ளுக்­கும் இடையில் உருவாகி இருக்­கும் புதிய பிரச்­சினை இது.

தைவா­னில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட சீதா பழம், 'வேக்ஸ்' ஆப்­பிள்­களில் பூச்­சிக்­கொல்லி மருந்­து­கள் இருப்­ப­தாகக் கூறிய சீன சுங்­கத் துறை அதற்கு அனு­மதி அளிக்க மறுத்தது.

அறி­வி­யல்­பூர்­வ­மாக எந்­த­வி­த­மான ஆதா­ர­மும் அளிக்­கா­மல் ஒரு­த­லை­ப்பட்­ச­மாக சீனா முடி­வெ­டுத்­துள்­ள­தாக தைவான் விவ­சா­யத் துறை அமைச்­சர் சொன்­னார்.

இரு­த­ரப்பு ஒப்­பந்­தத்­தின்படி, வரும் 30ஆம் தேதிக்­குள் பெய்­ஜிங் இதற்கு தீர்வு காண­வில்லை என்­றால் இது குறித்து உலக வர்த்­தக மையத்­தில் முறை­யி­டப்­படும் என தைவான் எச்­ச­ரித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!