'இஸ்ரேலியப் பிரதமர் உடனான சந்திப்பில் பைடன் தூங்கிவிட்டார்'

'இஸ்ரேலியப் பிரதமர் உடனான சந்திப்பில் பைடன் தூங்கிவிட்டார்'

1 mins read
367ecbe4-60ef-459c-9413-fcfabf7f8310
அமெரிக்க அதிபர் மாளிகையில் திரு பென்னட் பேசியபோது அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த திரு பைடன் 'உறங்குவதை' காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்தது. படம்: ஏஎஃப்பி -

இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்தலி பென்னட்டுடன் சந்திப்பு நடத்தியபோது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தூங்கிவிட்டதாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் மாளிகையில் திரு பென்னட் பேசியபோது அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த திரு பைடன் 'உறங்குவதை' காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

எனினும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய உண்மை சரிபார்ப்பு நடவடிக்கையில், திரு பைடன் தூங்கிவிட்டதாகக் கூறப்படுவதை மறுத்தது. மாறாக, அவ்விரு தலைவர்களின் சந்திப்பைக் காட்டும் மற்றொரு நீளமான காணொளி, திரு பென்னட் பேசியதற்கு திரு பைடன் பதில் கூறியதைக் காட்டியதை ராய்ட்டர்ஸ் சுட்டியது.

குறிப்புச் சொற்கள்