நீர்மூழ்கிக் கப்பல் பிரச்சினை: ஆஸ்திரேலியா வாக்குவாதம்

நீர்மூழ்கிக் கப்பல் பிரச்சினை: ஆஸ்திரேலியா வாக்குவாதம்

1 mins read
743e2891-eeec-42c9-900e-ceaf819d9367
-

சிட்னி: முத­லாம், இரண்­டாம் உல­கப் போர்­க­ளின்­போது ஆஸ்­தி­ரே­லிய வீரர்­க­ளின் தியா­கத்­தின் மூலம் பிரான்ஸ் மீதான தனது நேசத்தை ஆஸ்­தி­ரே­லியா ஏற்­க­னவே நிரூ­பித்­துள்­ளது என்று அந்­நாட்­டுத் துணைப் பிர­த­மர் பர்­னாபி ஜாய்ஸ் கூறி­யுள்­ளார்.

அத­னால் பிரான்ஸ் மீதான அக்­க­றை­யும் நேசத்­தை­யும் இப்­போது ஆஸ்­தி­ரே­லியா நிரூ­பிக்­கத் தேவை­யில்லை என்று அவர் கூறி­யுள்­ளார்.

பல ஆண்­டு­க­ளாக பிரான்­சு­டன் இடம்­பெற்று வந்த 40 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் நீர்­மூழ்­கிக் கப்­பல் ஒப்­பந்­தப் பேச்­சு­வார்த்­தையை ஆஸ்­தி­ரே­லியா திடீ­ரென ரத்து செய்­த­தால் பதற்­றத்­தைத் தணிக்க ஆஸ்­தி­ரே­லிய வர்த்­தக அமைச்­சர் டான் தெஹான், பிரெஞ்சு வர்த்­தக அமைச்­சு­ரு­டன் பேசப்­போ­வ­தா­கக் கூறி­யுள்­ளார். ஆனால் ஆஸ்­தி­ரே­லி­ய துணைப் பிர­த­ம­ரின் சொற்­கள் பிரான்­சின் கோபத்தை அதி­க­மாக்­கும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

அமெ­ரிக்­கா­வும் பிரிட்­ட­னும் பிரான்­சுடனான பதற்­றத்­தைத் தணிக்க முயற்சி செய்­கின்­றன.

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் பிரான்ஸ் அதி­பர் இமா­னு­வெல் மெக்­ரோ­னு­டன் முன்­கூட்­டியே பேச்சு ­வார்த்தை நடத்த கோரி­யுள்­ளார்.

இந்நிலையில், பிரெஞ்சு தற்காப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, தாமே முன்வந்து பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் பென் வாலசுடன் இந்த வாரம் நடத்த இருந்த சந்திப்பை ரத்து செய்ததாக பிரஞ்சு தகவல்கள் கூறின.