வடகொரியா எச்சரிக்கை: அணுவாயுதப் போட்டி ஏற்படும்

வடகொரியா எச்சரிக்கை: அணுவாயுதப் போட்டி ஏற்படும்

1 mins read
0556a5d9-a0af-46a1-8a26-636a19eea845
-

சோல்: அமெரிக்கா அறிவித்த இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் புதிய பங்­கா­ளித்­து­வ­மும் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அணு­ ஆற்­றல் கொண்ட நீர்­மூழ்­கிக் கப்­பல்­கள் விற்கும் ஒப்­பந்­த­மும் இந்த வட்­டா­ரத்­தில் அணு­வா­யு­தப் போட்­டியை ஏற்­ப­டுத்­த­லாம் என்று வட­கொ­ரியா நேற்று எச்­ச­ரித்­துள்­ளது.

ஆஸ்­தி­ரே­லியா, பிரிட்­ட­னு­டன் முத்­த­ரப்புப் பாது­காப்பு ஒப்­பந்­தத்தை அமெ­ரிக்கா கடந்த வாரம் அறி­வித்­தது. இதன்­கீழ், அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து அணு­வா­யுத ஆற்­றல் கொண்ட நீர்­மூழ்­கிக் கப்­பல்­களை ஆஸ்­தி­ரே­லியா வாங்­கும்.

"இது, மிக­வும் விரும்­பத்­த­காத, ஆபத்­தான முடிவு. ஆசிய-பசி­ஃபிக் வட்­டா­ரத்­தின் உத்­தி­பூர்­வ சம­நி­லை­யை­யும் இந்த நட­வ­டிக்கை பாதிக்­கும் அணு­வா­யு­தப் போட்­டா­போட்­டியை ஏற்­ப­டுத்­தும்," என வட­கொ­ரிய வெளி­யு­றவு அமைச்சு குறிப்­பிட்­ட­தாக உள்­ளூர் செய்தி தெரி­வித்­தது.

அனைத்­து­லக அள­வி­லான அணு­வா­யு­தப் பர­வல் நட­வ­டிக்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்­காவே அதி­கம் செயல்­ப­டு­வ­தாக அது குற்­றம்­சாட்­டி­யது.

சென்ற புதன்­கி­ழமை வட­கொ­ரியா இரு அணு­வா­யு­தங்­களை கட­லில் பாய்ச்­சிய ஒரு மணி நேரத்­தில் தென்­கொ­ரியா நீர்­மூழ்­கிக் கப்­ப­லி­லி­ருந்து ஏவு­க­ணை­யைப் பாய்ச்சி சோதனை நடத்­தி­யது.