மலேசியா: இளையர்களுக்கு தடுப்பூசி

மலேசியா: இளையர்களுக்கு தடுப்பூசி

2 mins read
348e36f4-12d0-43a2-bddf-1cc94e5fd811
புத்ராஜெயாவில் உள்ள ஒரு பள்ளியில் உயர்நிலைப் பள்ளி மாணவருக்கு ஃபைசர் தடுப்பூசியைச் செலுத்தத் தயாராகும் தாதி. படம்: ராய்ட்டர்ஸ் -

புத்­ராஜெயா: மலே­சியா, 13 வயது முதல் 17 வயது வரை­யி­லான அந்­நாட்டு இளை­யர்­க­ளுக்­குத் தடுப்­பூசி ­க­ளைப் போடத் தொடங்­கி­யி­ருக்­கிறது. சுமார் 3.2 மில்­லி­யன் பதின்ம வய­தி­ன­ருக்­குத் தடுப்­பூ­சி­ க­ளைப் போட திட்­ட­மி­டப்­ப­டு­வ­தாக மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் நேற்று கூறி­னார்.

பள்­ளி­கள், மருந்­த­கங்­கள், மருத்­து­வ­ம­னை­கள், தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட தடுப்­பூசி நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றில் இளை­யர்­கள் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­து.

மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் உள்ள இளை­யர்­க­ளுக்­குத் தடுப்­பூ­சி­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­படும் என்று திரு கைரி தெரிவித்தார்.

வீட்டுத் தனிமைக்கு விண்ணப்பம்

இந்நிலையில் வெளி­நா­டு­களில் இருந்து வரு­வோர் முழு­மை­யாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள பட்­சத்­தில், அவர்­கள் தங்­க­ளது வீட்­டி­லேயே தனி­மைப்­ ப­டுத்­திக்­கொள்ள புதிய இணையத் தளத்தில் விண்ணப்பிக்க முடியும் என்று மலேசிய சுகா­தார அமைச்சு கூறியுள்ளது.

தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள ஏது­வான இட­மாக கரு­தப்­பட்­டால் மட்­டுமே அவர்­கள் தங்­க­ளது வசிப்­பி­டத்­தி­லேயே தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டு­வர். மேலும், அவர்­கள் 'பிசி­ஆர்' பரி­சோ­த­னை­யில் 'தொற்றில்லை' எனச் சான்று பெற்­றி­ருக்க வேண்­டும்.

வீட்­டி­லேயே தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பும் பய­ணி­கள் இன்று 21ஆம் தேதி காலை 8 மணி முதல் www.moh.gov.my என்ற இணை­யத்­த­ளம் வழி­யாக விண்­ணப்­பிக்­க­லாம்.

மலே­சி­யா­விற்­குள் நுழை­வ­தற்கு ஏழு முதல் பத்து நாள்­க­ளுக்­குள் விண்­ணப்­பிக்க வேண்­டும் என்று அமைச்சு தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் கூறி­யது. ஏழு நாள்­க­ளுக்­குள் முடிவு தெரி­விக்­கப்­படும்.

இம்­மா­தம் 28ஆம் தேதி முதல் மலே­சி­யா­விற்கு வரும் பய­ணி­கள், புதிய இணை­யத்­த­ளத்­தில் விண்ணப் ­பிக்கலாம்.

இப்­போது மின்­னஞ்­சல் முக­வரி வழி­யாக அத்­த­கைய விண்­ணப்­பங்­கள் சமர்ப்­பிக்­கப்­படுகின்றன. இன்­னும் 6,000 விண்­ணப்­பங்­கள் நிலு­வை­யில் உள்­ளன என்று சுகா­தார அமைச்­சர் கைரி கூறி­னார்.