மாஸ்கோ: ரஷ்யாவின் பெர்ம் நகர பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர் ஒருவர் துப்பாக்கியால் தாறு மாறாகச் சுட்டதில் ஐவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
குறைந்தது 19 பேர் சம்பவத்தில் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க, முதல் மாடியின் சன்னல் வழியாக மாணவர்கள் குதித்து ஓடியதை உள்ளூர் ஊடகக் காணொளிகள் காட்டின.
மாஸ்கோவிலிருந்து 1,300 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அந்தப் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார். அவர் அந்தப் பல்கலைக்கழக மாணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த மாணவர் கொல்லப் பட்டுவிட்டதாக போலிசார் பின்னர் கூறினர். அவரது சடலத்தை ஊடகங்கள் காட்டின.
துப்பாக்கிச் சூட்டுக்கு அரசியலோ சமயமோ காரணமில்லை எனக் கூறப்பட்டது.
ரஷ்யாவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
எனினும், வேட்டை, சுயபாதுகாப்பு, விளையாட்டு போன்ற காரணங்களுக்காக தகுதி பெறுவோர் துப்பாக்கியை வாங்கலாம்.

