மலேசியா: லஞ்ச ஊழல் துறை அதிகாரிகள் கைது

மலேசியா: லஞ்ச ஊழல் துறை அதிகாரிகள் கைது

1 mins read
26707fba-7563-4a73-818d-04863f8358bc
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணை­யத்தைச் சேர்ந்த மூன்று அதி­காரி­கள், அந்­நாட்­டின் முன்­னாள் உள­வுத் துறையின் தலை­வருடன் தொடர்புள்ள வழக்­கில் பணத்­தைக் கையா­டி­ய­தற்­காகக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

அந்த மூவ­ரும், மலே­சி­யா­வின் வெளி­நாட்டு உள­வுத்­துறை அமைப்­பின் முன்­னாள் தலைமை இயக்கு­நர் ஹசானா அப்­துல் ஹமீ­தி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்ட 6 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் பணத்­தில் ஒரு பங்­கைக் கள­வா­டி­ய­தா­கக் கூறப்­பட்­டது. கள­வா­டப்­பட்ட பணத்­தில் ஒரு பகு­திக்கு பதி­லாக போலி நோட்­டு­கள் மாற்றி வைக்­கப்­பட்­டன. மூன்று அதி­கா­ரி­களும் கடந்த வாரம் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அர­சாங்­கப் பணம் 50.4 மில்­லி­யன் ரிங்­கிட்டை (S$16.3 மி.) கையா­டி­ய­தன் தொடர்­பில் திரு­வாட்டி ஹசானா மீது 2018ஆம் ஆண்­டில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

ஆனால் சென்ற ஏப்­ரல் மாதம் உயர் நீதி­மன்­றம் அவரை அந்த வழக்­கி­லி­ருந்து நிர­ப­ராதி என்று குறிப்பிடாமல் விடு­வித்­தது.

திரு­வாட்டி ஹசானா தமது அதி­கா­ரத்­தைத் தவ­றா­கப் பயன்­ ப­டுத்­தி­ய­தை­யும் முறை­கேட்­டில் ஈடு­பட்­ட­தை­யும் விசா­ரிக்க அமைக்­கப்­பட்ட சிறப்­புக் குழு­வில் மூன்று அதி­கா­ரி­களும் இருந்­த­னர் என்று மலே­சிய தக­வல்­கள் கூறின.