ஜெருசலம்: இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்தலி பென்னட்டுடன் சந்திப்பு நடத்தியபோது அமெ ரிக்க அதிபர் ஜோ பைடன் தூங்கிவிட்டதாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கூறியுள்ளார்.
அத்துடன் சமூக ஊடகக் காணொளி ஒன்றில் தூங்குவது போல தாமும் பாவனை செய்தார்.
அமெரிக்க அதிபர் மாளிகையில் திரு பென்னட் பேசியபோது அவர் அருகில் அமர்ந்திருந்த திரு பைடன் "உறங்கியதைக்" காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இவ்வேளையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய உண்மை சரிபார்ப்பு நடவடிக்கையில், திரு பைடன் தூங்கி விட்டதாகக் கூறப்படுவதை மறுத்தது.
மாறாக, அவ்விரு தலைவர் களின் சந்திப்பைக் காட்டும் மற்றொரு நீளமான காணொளி, திரு பென்னட் பேசியதற்கு திரு பைடன் பதில் கூறியதைக் காட்டியதை ராய்ட்டர்ஸ் சுட்டியது.
திரு நெட்டன்யாஹு அமெரிக்க அதிபரை நகைக்கவில்லை என்றும் இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தலியை நகைத்தார் என்று ஆளும் லிக்குட் கட்சி கூறியது.

