ஆஸ்திரேலிய பிரதமர்: பிரான்ஸ் அதிபருடன் பேசப் போவதில்லை

ஆஸ்திரேலிய பிரதமர்: பிரான்ஸ் அதிபருடன் பேசப் போவதில்லை

2 mins read
ff2a48cc-7ce7-4f65-98d1-888f4aeceb33
-

கேன்­பரா: உலகத் தலை­வர்­கள் பங்­கேற்­கும் ஐக்­கிய நாடு­கள் அமைப்பு மாநாட்­டின் போது பிரெஞ்சு அதி­ப­ரு­டன் பேசப் போவ­தில்லை என்று கூறி­யுள்­ளார் ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன்.

அமெ­ரிக்க-பிரிட்­டன் கூட்­டுத் திட்­டத்­தில் அணு­வாற்­றல் கொண்ட நீர்­மூழ்­கிக் கப்­பல்­கள் தயா­ரிக்க ஒப்­பு­தல் அளித்­தது ஆஸ்­தி­ரே­லியா.

இதற்­காக பிரான்ஸ் உட­னான நீர்­மூழ்­கிக் கப்­பல் ஒப்­பந்தப் பேச்­சு

­வார்த்­தையை ஆஸ்­தி­ரே­லியா ரத்து செய்­தது பிரான்­சைக் கோப­ம­டை­யச் செய்­துள்­ளது.

ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களும் பிரான்­சிற்கு ஆத­ர­வாக அணி திரண்­டுள்ள நிலை­யில் ஆஸ்­தி­ரே­லிய-ஐரோப்­பிய ஒன்­றிய வர்த்­தக பேச்­சு­வார்த்­தைக்கு அது அச்­சு­றுத்­த­லாக இருக்­கக்­கூ­டும் என்று கரு­தப்­ப­டு­கிறது.

அக்­டோ­பர் 12ஆம் தேதி ஆஸ்­தி­ரே­லியா, ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்கு இடை­யில் அடுத்த கட்ட வர்த்­தக ஒப்­பந்தப் பேச்­சு­வார்த்தை நடை­பெற உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்தப் பேச்­சு­வார்த்தை திட்­ட­மிட்டபடி நடை­பெ­றும் என்று எதிர் பார்ப்­ப­தாக ஆஸ்­தி­ரே­லிய வர்த்­தக அமைச்­சர் டான் தெஹான் சொன்னார்.

பிரான்­சு­ட­னான பதற்­றத்­தைத் தணிக்­கும் வகை­யில் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் அந்­நாட்டு அதி­பர் இமா­னு­வல் மெக்ரோ­னு­டன் பேச முற்­ப­டும்­போது, ​தான் தனி­யாக இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட போவ­தில்லை என்று கூறி­யுள்­ளார் மோரி­சன்.

"பிரான்ஸ் அதிபருடன் பேசுவதற்கான வாய்ப்பு இப்­போது அமை­ய­வில்லை. சரி­யான நேரத்­தில் அந்த வாய்ப்பு வரும் என்று உறு­தி­யாக நம்­பு­கி­றேன்," என்று நியூ­யார்க்­கில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் மோரி­சன் கூறி­னார்.

இதற்­கி­டையே, ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நீர்­மூழ்­கிக் கப்­பல் விவ­கா­ரம் சீனா, வட­கொ­ரி­யா­வை­யும் கோப

ம­டை­யச் செய்­துள்­ளது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் இச்­செ­யல், ஆயு­தப் போட்­டி­யைத் தூண்­டும் அபா­யம் கொண்­டது என்று இந்­தோ­னீ­சி­யா­வும் மலே­சி­யா­வும் கூறின.

ஆனால் பிலிப்­பீன்சோ ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது. இது வட்­டா­ரத்­தில் நிலைத்­தன்­மையை கொண்டு வர உத­வும் என்று அது கூறி­யது.