கியூபாவிடம் 10 மில்லியன் தடுப்பூசிகள் வாங்கும் வியட்னாம்
ஹவானா: வியட்னாமிற்கு 10 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை விற்க கியூபா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கியூபாவில் தயாரிக்கப்பட்ட அப்தலா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி அளித்த முதல் வெளிநாடு வியட்னாம் ஆகும். கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுப்பதில் அப்தலா தடுப்பூசி 90 விழுக்காட்டிற்கும் மேலான செயல்திறனைக் கொண்டுள்ளதாக கியூபா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அபராதத் தொகை அதிகரிப்பு
வெலிங்டன்: மக்கள் கட்டுப்பாடுகளை மீறுவதால் ஆக்லாந்திற்கு அப்பாற்பட்டும் கிருமி பரவக்கூடிய சாத்தியம் உள்ளது என்ற கவலைக்கு மத்தியில் நியூசிலாந்தில் அபாரதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
உரிய அனுமதி இல்லாமல் பயணம் செய்வோருக்கான அபராதம் 12,000 நியூசிலாந்து டாலராக அதிகரிக்கப்பட்டு உள்ளது. முன்பு அது 4,000 நியூசிலாந்து டாலராக இருந் தது. முகக்கவசம் அணியாததற்கான அபராதம் 300லிருந்து 4,000 நியூசிலாந்து டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
'ஐஎஸ் தீவிரவாதிகள் இல்லை'
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் அல்லது அல்காய்தா தீவிரவாதிகள் இருப்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்று தலிபான் ஆட்சியாளர்கள் கூறி
உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ஜலாலாபாத்தின் கிழக்கு நகரம் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்பதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கூறியதைத் தொடர்ந்து தலிபான் ஆட்சியாளர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

