யங்கூன்: ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சியை மியான்
மரின் ஆட்சிக்குழு விசாரணைக்கு உட்படுத்தியதாக அவரது வழக்
கறிஞர் நேற்று கூறினார்.
விசாரணையின்போது கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சூச்சி, அவற்றை மறுத்ததாக அவரது வழக்
கறிஞர் கின் மாங் சாவ் கூறினார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும்.
பதவி நீக்கப்பட்ட மியன்மாரின் முன்னாள் அதிபர் வின் மின்னிட்டும் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
தேசதுரோக வழக்கு, ரகசிய சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் ஆகியவற்றின் விசாரணை வரும் 1ஆம் தேதி தொடங்கஉள்ளது.

