மெல்பர்ன் அருகில் நிலநடுக்கம்; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

மெல்பர்ன் அருகில் நிலநடுக்கம்; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

1 mins read
0af5e775-ec7d-4314-9509-4bdfd5eb3fb1
நிலநடுக்கம் காரணமாக மெல்பர்னின் நகரமையத்தில் சேதமடைந்த கட்டடத்தைச் சோதனையிடும் அவசரகால, மீட்புப் பணி அதிகாரிகள். படம்: ஏஎஃப்பி -

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பர்ன் நக­ருக்கு அரு­கில் நேற்று நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது.

ரிக்­டர் அள­வில் 5.9ஆகப் பதி­வான நில­ந­டுக்­கம் சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று காலை 7 மணி அள­வில் நிகழ்ந்­தது.

நில­ந­டுக்­கம் கார­ண­மாக ஆஸ்­தி­ரே­லி­யா­வின் இரண்­டா­வது ஆகப் பெரிய நக­ர­மான மெல்­பர்­னில் உள்ள சில கட்­ட­டங்­கள் சேத­ம் அடைந்­த­தாக ஆஸ்­தி­ரே­லி­யப் புவி அறி­வி­யல் அமைப்பு கூறி­யது.

அண்டை மாநி­லங்­க­ளி­லும் அதிர்­வு­கள் உண­ரப்­பட்­ட­தாக ஆஸ்­தி­ரே­லிய ஊட­கம் தெரி­வித்­தது.

மெல்­பர்­னுக்கு 200 கிலோ­மீட்­டர் தூரத்­தில், மேன்ஸ்­ஃபீல்ட் எனும் கிரா­மப் பகு­தி­யில் நில­ந­டுக்­கத்­தின் மையப் பகுதி அமைந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

நில­ந­டுக்­கம் கார­ண­மாக அங்கு 10 கிலோ­மீட்­டர் ஆழத்­தில்

பள்­ளம் ஏற்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

நில­ந­டுக்­கத்தை அடுத்து, மேன்ஸ்­ஃபீல்ட் கிரா­மத்­தில் நில அதிர்­வு­கள் ஏற்­பட்­ட­தாக அங்­குள்ள மக்­கள் கூறி­னர்.

மெல்­பர்­னில் உள்ள நக­ர­

மை­யத்­தில் கட்­ட­டச் சுவர் இடிந்து விழுந்­தது. செங்­கற்­கள் தரை­யில் கிடந்­ததைக் காட்­டும் காணொ­ளி­களும் படங்­களும் இணை­யத்­தில் வலம் வந்­தன.

மெல்­பர்­னில் உள்ள சில பகு­தி ­களில் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் கட்­ட­டங்­க­ளி­லி­ருந்து மக்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

நில­ந­டுக்­கம் தொடர்­பாக யாருக்­கும் கடு­மை­யான பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை என்று ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் தெரி­வித்­தார்.