கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை; உயிருக்குப் பயந்து ஓடிய மக்கள்

கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை; உயிருக்குப் பயந்து ஓடிய மக்கள்

1 mins read
98281f53-2ebe-44aa-b4ab-c9cdcf5d5618
சண்டை காரணமாக அழிந்த வீடுகள். படம்: இபிஏ -

யங்­கூன்: இந்­திய எல்லை அரு­கில் உள்ள மியன்­மார் நக­ர­மான தந்­லாங்­கில் மியன்­மார் ராணு­வத்­துக்­கும் போரா­ளி­க­ளுக்­கும் இடையே சண்டை மூண்­டது.

கட்­ட­விழ்க்­கப்­பட்ட வன்­

மு­றை­ கார­ண­மாக அங்­கு உள்ள பல கட்­ட­டங்­கள் தீக்கு இரை­யா­யின.

மியன்­மா­ரின் சின் மாநி­லத்­தில் இருக்­கும் அந்த நக­ரத்­தில் ஏறத்­தாழ 10,000 பேர் வாழ்ந்து வந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் தங்­கள் இருப்­பி­டங்­கள் அழிக்­கப்­பட்­டதை அடுத்து, உயி­ருக்­குப் பயந்து அவர்­களில் பலர் அங்­கி­ருந்து தப்பி ஓடி­ய­தாக மியன்­மார் ஊட­கம் தெரி­வித்­தது.

அவர்­களில் சிலர் எல்­லை­யைக் கடந்து இந்­தி­யா­வில் தஞ்­சம் அடைந்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, வீடு ஒன்று தீப்­பற்றி எரிந்­து­கொண்­டி­ருந்­த­தைப் பார்த்து அதை அணைக்க முற்­பட்ட கிறிஸ்­துவ பாதி­ரி­யாரை மியன்­மார் ராணுவ வீரர்­கள் சுட்­டுக் கொன்­ற­தாக மியன்­மார் நாவ் செய்­தித்­த­ளம் தெரி­வித்­தது.

இதை மியன்­மார் ராணு­வம் மறுத்­துள்­ளது.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் மியன்­மார் ராணு­வத்­துக்­குச் சொந்­த­மான முகாம் ஒன்றை போரா­ளி­கள் தகர்த்­த­னர்.

அதற்­குப் பதி­லடி கொடுக்­கும் வகை­யில் வான்­வ­ழித் தாக்­கு­தல்­களை மியன்­மார் ராணு­வம் நடத்­தி­யது.