அமெரிக்காவில் சிலருக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் குறிப்­பிட்ட சில­ருக்கு மட்­டும் 3வது தடுப்­பூசி (பூஸ்­டர்) போட அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

65 வய­தைக் கடந்த முதி­ய­வர்­ க­ளுக்கு கடைசி தடுப்­பூசி போட்டு ஆறு மாதங்­கள் ஆகி­யி­ருந்­தால் பூஸ்­டர் தடுப்­பூசி போட­லாம் என்று உணவு, மருந்து நிர்­வா­கம் அனுமதி ­ய­ளித்­துள்­ளது.

எளி­தில் நோய்­வாய்ப்­ப­டக் கூடி­ய­வர்­க­ளுக்­கும் முன்­னணி ஊழி­யர்­க­ளுக்­கும் பூஸ்­டர் தடுப்­பூசி போட­வும் அது அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது.

இத­னால் மில்­லி­யன் கணக்­கான அமெ­ரிக்­கர்­கள் 3வது தடுப்­பூ­சிக் குத் தகுதி பெற்­றுள்­ள­னர்.

இருந்­தா­லும் பூஸ்­டர் தடுப்­பூசி போடு­வதற்கு நோய்க் கட்­டுப்­பாடு, தடுப்பு நிலை­யம் (சிடிசி) அங்­கீ காரம் வழங்க வேண்­டும்.

இது குறித்து கலந்து பேச சிடி­சி­யின் சுயேச்­சைக் குழுக்­கள் சிறப்­புக் கூட்­டத்­துக்கு ஏற்­பாடு செய்­துள்­ளன. இதை­ய­டுத்து பூஸ்­டர் தடுப்­பூசிக்கு அங்கீகாரம் வழங்கப் படும் எனத் தெரிகிறது.

நோயால் எளி­தில் பாதிக்­கப் ­படக்­கூ­டி­ய­வர்­கள் யார், எத்­த­கைய முன்­னணி ஊழி­யர்­கள் பூஸ்­டர் தடுப்­பூ­சிக்­குத் தகுதி பெறு­வார்­கள் என்­பது குறித்து குழு பரிந்­து­ரை­களை வெளி­யி­டும்.

"எங்­க­ளைப் பொறுத்­த­வரை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள், பகல் நேர ஊழி­யர்­கள், மளி­கைக் கடை ஊழி­யர்­கள், வீடற்­ற­வர்­கள் ஆகி­யோரை பட்­டி­ய­லில் சேர்த்­துள்­ளோம்," என்று உணவு, மருந்து நிர்­வா­கம் தெரி­வித்­தது. முன்­ன­தாக இம்­மா­தத்­தி­லி­ருந்து பூஸ்­டர் தடுப்­பூசி மக்­க­ளுக்கு கிடைக்­கும் என்று அதி­பர் ஜோ பைடன் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார்.

அந்த உறு­தி­மொ­ழிக்கு வெற்றி கிடைத்­துள்ள நிலையில் உணவு, மருந்து நிர்­வா­கத்­தின் அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!