அமெரிக்காவின் முயற்சியால் பிரான்சின் கோபம் தணிகிறது

அமெரிக்காவின் முயற்சியால் பிரான்சின் கோபம் தணிகிறது

2 mins read
8634c6f6-2bb7-4e59-98c6-bc158245a842
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்கா, பிரிட்­டன், ஆஸ்­தி­ரே­லியா ஆகிய மூன்று நாடு­களும் கூட்­டாக ஆக்­கஸ் தற்­காப்பு உடன்­பாட்டை செய்­து­கொண்­ட­தால் பிரான்­சு­ட­னான உறவு மோச­ம­டைந்­தது.

இத­னைச் சீர் செய்ய அமெ­ரிக்கா தீவிர முயற்­சி­களை எடுத்து வரு­கிறது. இதற்கு ஓர­ளவு பலன் கிட்­டி­யுள்­ளது.

ஆக்­கஸ் தற்­காப்பு ஒப்­பந்­தத்­தின் கீழ் பல்­வேறு தொழில்­நுட்­பங்­களை ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அமெ­ரிக்­கா­வும் பிரிட்­ட­னும் வழங்­கு­கின்றன.

முதல் கட்­ட­மாக அணு­சக்தி நீர்­மூழ்­கிக் கப்­பல்­கள் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வழங்­கப்­படுகிறது.

இதன் கார­ண­மாக பிரான்­ஸி­ ட­மி­ருந்து நீர் மூழ்­கிக்­கப்­பல்­களை வாங்­கும் 37 பில்­லி­யன் டாலர் மதிப்­புள்ள ஒப்­பந்­தத்தை ஆஸ்­தி­ரே­லியா ரத்து செய்­துள்­ளது.

இத­னால் ஆத்­தி­ர­ம­டைந்­துள்ள பிரான்ஸ், இது குறித்து முன்­கூட்­டியே தெரி­விக்­கா­தது நம்­பிக்­கைத் துரோ­கம் என்று சாடி­யி­ருக்­கிறது.

கோபத்­தின் உச்­சக்­கட்­ட­மாக அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள தங்­க­ளு­டைய தூதர்­களை மீட்­டுக்­கொள்­வ­தாக பிரான்ஸ் அறி­வித்­தது.

இந்த நிலை­யில் பிரான்ஸை சமாதானப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது

அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னும் பிரான்ஸ் அதி­பர் இம்­மா­னு­வேல் மேக்­ரோ­னும் புதன்­கி­ழமை அன்று தொலை­பே­சி­யில் அரை மணி நேரம் பேசி­னர்.

அடுத்த மாதம் இறு­தி­யில் ஐரோப்­பா­வில் மீண்­டும் சந்­திக்­க­வும் அவர்­கள் இணங்­கி­யுள்­ள­னர்.

இதை­ய­டுத்து அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து தனது தூதர்­களை மீட்­டுக் கொள்­ளும் திட்­டத்தை பிரான்ஸ் கைவிட்­டுள்­ளது.

ஆனால் இதே போன்று ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­கும் பிரான்ஸ் செய்­யுமா என்­பது தெரி­ய­வில்லை.

அதிபர் ஜோ பைடன், ஆசிய-பசி­பிக் வட்­டா­ரத்­தில் பிரெஞ்சு மற்­றும் ஐரோப்­பிய நாடு­க­ளின் ஈடு­பாடு மிக அவ­சியம் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

கடந்த வாரம் அறி­விக்­கப்­பட்ட ஆக்­கஸ் தற்­காப்பு உடன்­பாடு, தென்­சீ­னக் கட­லில் சீனா­வின் ஆதிக்­கத்தை எதிர்­கொள்­ளும் முயற்சி என்று தெரி­விக்­கப்­பட்டது.