யங்கூன்: மியன்மாரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு தடுத்து வைக்கப்பட்ட ஆஸ்திரேலியர் முதல் முறையாக நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
முன்னைய அரசாங்கத் தலைவரான ஆங் சான் சூச்சிக்கு அவர் ஆலோசகராக இருந்தார்.
குடிநுழைவு, ரகசிய சட்டத்தின் கீழ் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற வேண்டிய வயதில் உள்ள மியன்மார் ராணுவத் தலைவர், ஆங் சான் சூச்சி தலைமையிலான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்தார்.
அப்போது கைது செய்யப்பட்ட முதல் வெளிநாட்டு நபர் மெக்குவேரி பல்கலைக்கழகப் பேராசிரியரான ஷான் டர்னெல். யங்கூனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவர் எப்படி இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் நேற்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். ஷான் டர்னெல் உடல் தளர்ந்து களைப்பாக இருந்தார் என்று அவரது வழக்கறிஞர் கின் மாவுங் ஸாவ் கூறினார்.
பேராசிரியர் டர்னெலுக்கு முழுமையான கொவிட்-19 பாதுகாப்புக் கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் சொன்னார். மியன்மாரில் கிருமித்தொற்று அதிகரித்து வரும் வேளையில் அவரை விடுவிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் அவரது மனைவி கேட்டுக்கொண்டார். அதன் பிறகு சிறையில் அவருக்குத் தடுப்பூசி போடும் புகைப்படம் ஒன்று மட்டுமே வெளியானது.
அதன் பிறகு அவரை பற்றி தகவல் இல்லை.

