செய்திக்கொத்து

1 mins read
5098b448-c225-4fd5-b699-64466948667d
-

முடக்கம் விரைவில் அகலும்

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், 90 விழுக்காட்டினருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டதும் முடக்கநிலை அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆகஸ்ட்டில் உருமாறிய டெல்டா கிருமி அதிவேகமாகப் பரவியதால் ஆக்லாந்தில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்தன.

நவம்பர் 29ல் மீண்டும் வழக்கு

ஹாங்காங்: ஹாங்காங்கில் 47 ஜனநாயக ஆதரவாளர்கள் மீதான வழக்கு விசாரணை மீண்டும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி நேற்று தெரிவித்தார். வழக்குக்கு முந்திய சட்ட நடவடிக்கைகளுக்கு அவகாசம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தாய்லாந்து திட்டத்தில் தாமதம்

பேங்காக்: சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் நம்பியுள்ள தாய்லாந்து, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டவர்களுக்கு தனிமைப்படுத்தும் காலம் ஏழு நாட்களுக்கு குறைத்து நாட்டுக்குள் அனுமதிக்கும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளது. தடுப்பூசி போடும் பணி முழுவேகம் எடுக்கவில்லை என்பதே அதற்குக் காரணம்.