60 மி. தடுப்பூசி நன்கொடை

60 மி. தடுப்பூசி நன்கொடை

1 mins read
31545aca-7d82-4f24-854a-e185770b8d0a
-

தோக்­கியோ: ஜப்­பான் முன்பு உறுதி அளித்­த­தை­விட இரண்டு மடங்கு தடுப்­பூ­சி­களை தான­மாக வழங்க முன்­வந்­துள்­ளது.

தேவை­யான நாடு­க­ளுக்கு மொத்­தம் 60 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் விநி­யோ­கிக்­கப்­படும் என்று மெய்­நி­கர் மாநாட்­டில் பிர­த­மர் யோஷி­ஹிடே சுகா அறி­வித்­தார்.

முன்பு 30 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் நன்­கொ­டை­யாக வழங்­கப்­படும் என்­றும் உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தலை­மை­யி­லான கோவாக்ஸ் தடுப்­பூசி பகிர்­வுத் திட்­டத்­துக்கு ஒரு பில்­லி­யன் டாலர் வழங்­கப்­படும் என்­றும் ஜப்­பான் தாராள மன­து­டன் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

"உல­கம் முழு­வ­தும் பல்­வேறு நாடு­க­ளுக்­கும் பல்­வேறு வட்­டா­ரங்களுக்­கும் 23 மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய தடுப்­பூ­சி­களை வழங்­கி­யுள்­ளோம்.

"தடுப்­பூ­சி­களை அதிக எண்­ணிக்­கை­யில் நன்­கொ­டை­யாக வழங்­கும் நாடு­களில் ஜப்­பான் 3வது இடத்­தில் உள்­ளது," என்று பிர­த­மர் சுகா பெரு­மை­யு­டன் குறிப்­பிட்­டார். ஜப்­பான் பெரும்­பா­லான தடுப்­பூ­சி­களை கோவாக்ஸ் திட்­டத்­துக்கு வெளியே இரு தரப்பு ஒப்­பந்­தத்­தின் கீழ் ஆசிய நாடு­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளது.

ஆனால் இறக்­கு­மதி செய்­யப்­படும் ஃபைசர், மொடர்னா தடுப்­பூ­சி­களைப் பெரி­தும் நம்­பி­யுள்ள ஜப்­பா­னில் இது­வரை 55 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே முழு­மை­யாகத் தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ளது.