மலேசியாவில் 13,754 பேர் பாதிப்பு

மலேசியாவில் 13,754 பேர் பாதிப்பு

1 mins read
e7cfb930-c547-4916-8bae-33ce88bc7be7
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் நேற்று ஒரு நாள் மட்­டும் புதி­தாக 13,754 பேர் கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். இது, முந்­தைய நாள் பதி­வான 14,990 தொற்­றுச் சம்­ப­வங்­ க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் சற்­றுக் குறைவு. மொத்­தம் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 2,156,678க்கு அதி­க­ரித்­துள்­ளது. ஜோகூ­ரில் மட்­டும் 1,913 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

புதன்­கி­ழமை நள்­ளி­ரவு வரை கொவிட்-19 தொற்றுக்கு 487 பேர் உயி­ரி­ழந்துவிட்டனர். செப்­டம்­பர் 11 (592), செப்­டம்­பர் 14 (493) தேதிகளில் பதி­வான மர­ணச் சம்­ப­வங்களு­டன் இது இரண்­டா­வது உச்சமாகும்.

தொற்­றால் இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் 24,565க்கு அதி கரித்­துள்­ளது. இதற்­கி­டையே இவ்­வாண்டு 17 வய­துக்­குக் கீழ் உள்ள 410,762 குழந்­தை­க­ளுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது என்ற அதிர்ச்சித் தக­வலை நேற்று வெளி­யிட்ட மலே­சிய சுகா­தார அமைச்சு, பெரி­ய­வர்­க­ளுக்கு தடுப்­பூசி போட்­டால் குழந்­தை­க­ளைப் பாது­காக்­கும் என்று கருத முடி­யாது என்­றது.