சிட்னி: ஆஸ்திரேலியாவில் பெரியவர்களில் பாதிப் பேர்க்குமேல் முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
விக்டோரிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட சாதனை அளவை நெருங்கிவரும் வேளையில், தடுப்பூசி நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதிகம் பரவக்கூடிய உருமாறிய 'டெல்டா' கிருமியால் ஆஸ்திரேலியா மூன்றாவது கொரோனா அலையை எதிர்கொண்டு வருகிறது. கேன்பரா, சிட்னி, மெல்பர்ன் ஆகிய முக்கிய நகரங்களில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட 12.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விக்டோரியாவில் நேற்று புதிதாக 733 பேர்க்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது; ஒருவர் இறந்துவிட்டார். ஆக அதிகமாக, நேற்று முன்தினம் அங்கு 766 பேரைக் கிருமி தொற்றியது. இதனிடையே, நியூ சௌத் வேல்சில் கிருமிப் பரவல் மட்டுப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று அங்கு 1,043 பேர்க்குத் தொற்று உறுதியானது.

