தோக்கியோ: கொவிட்-19 பரவல் நிலைமை மேம்பட்டு வருவதால் ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் அவசரநிலைக் கட்டுப்பாடுகள் விரைவில் மீட்டுக்கொள்ளப்படலாம் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் நொரிஹிசா தமுரா தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதமும் நோயாளிகளுக்கான படுக்கை இருப்பு நிலவரத்தையும் பொறுத்து, இம்மாத இறுதிக்குள் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார் அவர். தற்போது ஐந்தாவது கொரோனா அலையை எதிர்கொண்டு வரும் ஜப்பானில் கடந்த மாதம் சாதனை அளவில் பாதிப்புகள் பதிவாயின.
ஜப்பான்: முடிவை நோக்கி கொவிட்-19 அவசரநிலை
1 mins read
-

