ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி: தாய்லாந்து விரைவுபடுத்துகிறது

ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி: தாய்லாந்து விரைவுபடுத்துகிறது

1 mins read
08895d49-0ba6-4233-9cfd-8cc7d3ff42f8
-

பேங்காக்: இன்னும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 210,000 ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கையைத் தாய்லாந்து விரைவுபடுத்தவுள்ளது.

அவர்களுடன், உயர்நிலைப் பள்ளி, தொழிற்கல்வி மாணவர்கள் அனைவர்க்கும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பர் என்று தாய்லாந்து கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது. 12-17 வயதிற்குட்பட்ட உயர் நிலைப் பள்ளி, தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகளைப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, அங்கு நேற்று முன்தினம் மேலும் 12,697 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது; 132 பேர் உயிரிழந்துவிட்டனர்.