அக்டோபரில் 8 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்யும்

அக்டோபரில் 8 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்யும்

1 mins read
0e7ae57e-8c02-4ac0-b65a-d29da3074ab7
வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற 'குவாட்' தலைவர்கள் சந்திப்பு. படம்: இபிஏ -

அக்டோபர் மாத இறுதிக்குள் எட்டு மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்யவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சனிக்கிழமை (செப்டம்பர் 25) கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதிகாரத்துவப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஜப்பானியத் தலைவர்களைச் சந்தித்த அவர், தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவது குறித்து உறுதியளித்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஷ்ரிங்லா, அந்த எட்டு மில்லியன் தடுப்பூசிகளில் பெரும்பாலானவை ஆசிய பசிபிக் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

குறிப்புச் சொற்கள்