கனரக வாகன ஓட்டுநர்களுக்குப் பற்றாக்குறை; விசா விதிமுறையில் தளர்வு

1 mins read
f5ec2be2-6f6d-4a99-98ea-de55a17031fd
கிழக்கு லண்டனில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனமோட்டிகள். படம்: ஏஎஃப்பி -

கனரக வாகன ஓட்டுநர்களுக்குக் கடும் பற்றாக்குறை நிலவுவதால் பிரிட்டனில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலை நிரப்ப முடியவில்லை.

எனவே, கனரக வாகன ஓட்டுநர்களுக்குத் தற்காலிகமாக விசா வழங்குவதற்கான திட்டங்களை பிரிட்டன் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகியகால விசாமூலம் 5,000 வெளிநாட்டு ஓட்டுநர்கள் பிரிட்டனுக்குள் நுழைய அரசாங்கம் அனுமதிக்கும் என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பிரிட்டனில் கனரக வாகன ஓட்டுநர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.