அவதிப்படும் விக்டோரியா

மெல்பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் நேற்­றைய நில­வ­ரப்­படி புதி­தாக 847 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது, ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். ஆஸ்­தி­ரே­லியர்­கள் அதி­கம் விரும்­பிப் பார்க்­கும் ஆஸ்­தி­ரே­லிய 'ரூல்ஸ் ஃபுட்பால்' எனப்­படும் விளை­யாட்டுப் போட்டி ஒன்­றின் இறு­தி­யாட்­டம் நேற்று நடை­பெ­ற­விருந்ததை முன்­னிட்டு கூடு­மா­ன­வரை வீட்­டில் இருக்­கு­மாறு பொது­மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர். இறுதியாட்டத்தில் மெல்பர்னைச் சேர்ந்த இரண்டு அணிகள் மோதவிருந்தன.

கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் வரும் நவம்­பர் மாதம் நடுப் பகுதி வரை தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என்று அதி­கா­ரி­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர். 70 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு இரண்டு முறை தடுப்­பூசி போடும் இலக்கை அதி­கா­ரி­கள் கொண்­டுள்­ள­னர்.

தற்­போது சுமார் 46 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். தடுப்­பூ­சித் திட்­டத்­திற்கு எதி­ராக மெல்­பர்­னில் இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டங்­கள் இப்போது அந்­ந­க­ரின் குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளி­லும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மெல்­பர்­னின் வடக்­குப் பகு­தி­யின் சில இடங்­களில் போலி­சார் 30க்கும் அதி­கமா­னோ­ரைக் கைது­செய்­தனர்.

ஆர்ப்­பாட்­டங்­க­ளால் கிரு­மிப் பர­வல் மேலும் மோச­ம­டை­யக்­கூடும் என்று அதி­கா­ரி­கள் அஞ்­சு­கின்­ற­னர். கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் ஒரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. அவர் சிகிச்­சைக்­காக மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

கடந்த வாரம் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டோ­ரில் 60 பேர் மாண்­ட­னர். ஆனால் புதி­தா­கக் கிரு­மித்­தொற்று ஏற்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பது மெது­வ­டை­யும் அறி­கு­றி­களும் தென்­ப­டு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!