ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் மீது ஊழல் புகார்

ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் மீது ஊழல் புகார்

1 mins read
1d8eef57-c1a8-4c0f-ae9f-0f0293804079
-

கோலா­லம்­பூர்: மலே­சிய ஊழல் ஒழிப்பு ஆணை­யத்­தைச் சேர்ந்த மூன்று அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­படும் விசா­ர­ணை­யில் ஹோட்­டல் ஒன்­றில் 16,000 வெள்ளி ரொக்­க­மும் சொகுசு வாகனங்களும் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. ஊழல் விசா­ர­ணை­யில் பறி­முதல் செய்­யப்­பட்ட 8.1 மில்­லி­யன் வெள்ளி பெரு­மா­னம் உள்ள சொத்­து­கள் காணா­மற்­போ­ன­தன் தொட­ர்பில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.

கண்­டெ­டுக்­கப்­பட்ட சொகுசு வாக­னங்­களும் ரொக்­க­மும் விசாரணை மேற்­கொள்­ளப்­படும் மூன்று அதி­கா­ரி­களில் ஒரு­வ­ருக்­குச் சொந்­த­மா­னவை எனக் கரு­தப்­ப­டு­கிறது.

ஊழல் விசா­ரணை அதி­கா­ரி­களால் தடுத்து வைக்­கப்­பட்ட அவர்­கள் இம்­மா­தம் 14ஆம் தேதி­யிலிருந்து 19ஆம் தேதி வரை விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக மலாய் மெயில் நாளி­தழி­டம் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. சொகுசு வாக­னங்­கள் ஹோட்­ட­லின் வாகன நிறுத்­தத்­தில் இருந்­தது தெரி­ய­வந்­தி­ருக்­கிறது. வாக­னங்­களின் பின்­ன­ணியை அறிந்­து­கொள்ள அவற்­றின் ஆவ­ணங்­களை மலே­சிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதி­கா­ரி­கள் ஆராய்­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.கண்ெட­டுக்­கப்­பட்ட 16,000 வெள்ளி ரொக்­கம், பறி­மு­தல் செய்யப்­பட்ட 8.1 மில்­லி­யன் வெள்ளி பெரு­மா­னம் உள்ள சொத்­துகளில் ஓர் அங்­கமா என்­பதை ஆணை­யம் விசா­ரித்து வரு­வ­தா­க­வும் உத்துசான் மலே­சியா நாளி­த­ழி­டம் தெரி­விக்­கப்­பட்­டது. பறி­மு­தல் செய்­யப்­பட்ட சொத்­து­கள் மலே­சிய வேவுத் துறை அமைப்­பின் முன்­னாள் தலை­வ­ருக்­குச் சொந்­த­மா­னவை.

தடுத்து வைக்­கப்­பட்ட அதி­காரி­களில் ஒரு­வர் உயர்தர மோட்­டார்­சைக்­கிளை வைத்­தி­ருந்­த­தா­க­வும் சொகுசு வீட்­டில் வசித்­த­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது. மூன்று அதி­கா­ரி­க­ளின் சொத்­து­கள், நிதித் தக­வல்­கள் அனைத்­தும் ஆரா­யப்­படு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.