பயணக் கட்டுப்பாடுகளை முடுக்கிவிடும் மக்காவ்

பயணக் கட்டுப்பாடுகளை முடுக்கிவிடும் மக்காவ்

1 mins read
ef71662e-fcf6-43e8-ae7c-87d2d470a08a
-

ஹாங்­காங்: சீனா­வில் ஒரு வாரம் நீடிக்­கும் விடு­முறை காலம் வரு­வ­தை­யொட்டி மக்­காவ் நகரில் கொவிட்-19 பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்நகரின் விளை­யாட்­டுத் துறை­யைப் பாதிக்­கக்­கூ­டிய வகை­யில் அங்கு கிருமி பர­வாமல் இருக்க இவ்­வாறு செய்­யப்­ப­டு­கிறது.

எல்லா குடி­யி­ருப்­பா­ளர்­களும் மக்­கா­விற்கு வரு­வோ­ரும் கட்­டா­ய­மாக கொவிட்-19 பரி­சோ­த­னை மேற்­கொள்­வதை அர­சாங்­கம் கட்­டா­ய­மாக்­கி­யுள்­ளது. மூன்று நாட்­களுக்­குப் பெரிய அள­வில் மேற்­கொள்­ளப்­படும் கொவிட்-19 பரி­சோ­தனை திட்டத்தின்­கீழ் அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிக்கை ஒன்­றில் குறிப்­பி­டப்­பட்டது.

தேவை ஏற்­ப­டா­விட்­டால் நக­ரை­விட்­டுப் பய­ணம் செய்­ய­வேண்­டாம் என்று அர­சாங்­கம் பொது­மக்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யது. நக­ரி­லி­ருந்து வெளி­யே­றும் பய­ணி­கள், தங்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை என்­பதை உறு­தி­செய்­யும் பரி­சோ­தனை முடி­வைக் காட்­ட­வேண்­டும் என்­றும் அர­சாங்­கம் குறிப்­பிட்­டது. ஷென்­சன், சூஹாய் உள்­ளிட்ட சீன நக­ரங்­க­ளுக்­குச் செல்­வ­தற்­கான பய­ணச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.