ஓஸ்லோ: நார்வேயில் அனைத்து கொவிட்-19 கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளால் அந்நாட்டின் பல வர்த்தகங்கள் பெரிதும் பாதிப்படைந்தன, சமூக அளவில் நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறவில்லை.
கொவிட்-19 சவால்களை முறியடித்து இயல்புநிலைக்குத் திரும்பிய ஒருசில நாடுகளில் நார்வேயும் அடங்கும். டென்மார்க், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் இயல்நிலைக்குத் திரும்பிவிட்டன.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு கட்டுப்பாடுகள் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சில எல்லைக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. நார்வேயில் 67 விழுக்காட்டு மக்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

